Yaenthaan unakkku
- SamratchanaLyrics
- Feb 15, 2019
- 1 min read
Yaenthaan unakkku innum angnaanamo - ivan
evar kaikkum adanguginra vingnaanamo maname
thaan ennum agandhai thandha thadumaatramo - perum
thagudhi unakkillaiyenra yaemaatramo maname
iraivan ulaa vandha thirukkolamae
ivan vizhiyil suzhalum navakolumae
marai naangum thaedi kaanaa mani dheepamae - ivan kaal
mannpattaal theerum unnai thodar saabamae
pattu peethaambarangal anindhaalenna
paravasaththil nadam aadi suzhanraalenna
anigal poondazhagu kondaalenna - piravi
pini theerkkum maa marundhai ariyaadhiruppadhenna
kaanji magaan mahaa jothi enraar saatchi vaendumaa
kodi guru kailaasamenraar kaatchi vaendumaa
yogiram azhaiththa pradhamar aatchi vaendumaa - idhai
yosiththarindha pinnum aaraaychi vaendumaa maname
ஏன்தான் உனக்கு இன்னும் அஞ்ஞானமோ - இவன்
எவர் கைக்கும் அடங்குகின்ற விஞ்ஞானமோ மனமே
தான் என்னும் அகந்தை தந்த தடுமாற்றமோ - பெறும்
தகுதி உனக்கில்லையென்ற ஏமாற்றமோ மனமே
இறைவன் உலா வந்த திருக்கோலமே
இவன் விழியில் சுழலும் நவகோளுமே
மறை நான்கும் தேடிக் காணா மணி தீபமே - இவன் கால்
மண்பட்டால் தீரும் உன்னைத் தொடர் சாபமே
பட்டுப் பீதாம்பரங்கள் அணிந்தாலென்ன
பரவசத்தில் நடம் ஆடிச் சுழன்றாலென்ன
அணிகள் பூண்டழகு கொண்டாலென்ன - பிறவிப்
பிணி தீர்க்கும் மாமருந்தை அறியாதிருப்பதென்ன
காஞ்சி மகான் மஹா ஜோதி என்றார் சாட்சி வேண்டுமா
கோடி குரு கைலாசமென்றார் காட்சி வேண்டுமா
யோகிராம் அழைத்த பிரதமர் ஆட்சி வேண்டுமா - இதை
யோசித்தறிந்த பின்னும் ஆராய்ச்சி வேண்டுமா மனமே
Comentarios