top of page

Yaar Baba enru kettaal

  • SamratchanaLyrics
  • Feb 17, 2019
  • 2 min read

Yaar Baba enru kettaal

yaadhumaay nirkum

gnana ver baba enalaam

anbin vidhai baba enalaam

dharma neer baba enalaam

vazhum nijam baba enalaam

ellaam thoraayam aagum - mutrum

sonnadhaai aaga maattaa


asadu pol avan sirippaan

annai pol aadharippaan

kasadarai kooda ullang

kaiyile yendhi kolvaan

visaiyila bommai pole

virakthiyil nirpor munne

dhisai yellaam thaane ninru

selgadhi arulvaan kandeer


kalai kondu vandhaal

thaane kattundu rasigan aavaan

ilai kondu vandhaal

thaane insuvai amudham aavaan

valai kondu vandhaal

thaane vandhangu sikki kolvaan

vilai kondu vandhaal

thaane vilaiyaadi paarppaan kandeer


thittuvaan kobakkaaran

thithikkudhe enbaargal

kuttuvaan kurumbukkaaran

koduthu vaithom enbaargal

muttuvaan kanrai pole

muthamittaan enbaaargal

vatta vaan madhi mugathaan

vasiyam thaan seivaan polum


paithiyam thannai sutri

pathu per iruppaar -indha

paithiyam thannai sutri

pathu pathaayiram per

paithiya alavukkerpa

thogai koodum polum - indha

paithiya naadhanai pol

vaithiya nadhan illai


pithana ? aamaam. aanaal

pitharkku piththan kandeer

bakthana ? aamaam. aanaal

baktharkku bakthan kandeer

mukthanaa ? aamaam. aanaal

muktharkku mukthan kandeer

sidhanaa ? aamaam. aanaal

sitharkku siththan kandeer


Gopalan Baba aanaan

Govindhan Baba aanaan

boopaalan Baba aanaan

pugazh Raman Baba aanaan

boo baaram thaanga vandha

pudhu Krishnan Baba aanaan

Babavai paarkka vaareer

Babavaay aaga vaareer


anbukkul karuvaay aagi

anbukkul uruvaay aagi

anbukkul thiruvaay aana

anbukku perthaan Baba

manbukku dheivam vandhu

manidharai aandu kollum

anbukku peyarthaan Baba

avathaara anbu Baba


munnaadi ninru kondu

mugam paarkkum velai andha

kannaadi thannil neengal

kaanbadhu avanaithaane

pennmaane aanne ungal

perunkurai thanai unarndhu

pemmaanil ummai kandu

perumaanaay aaga vaareer


maa perum yaanai mele

mavuththan pillai yeri

koovidum kudhikkum chinna

kurumbugal seyyum aanaal

oaviyam pole yanai

utkaarndhu kidakkum andha

gopura yanai Baba

kuzhandhaigal naangal kandeer


யார் பாபா என்று கேட்டால் - யாதுமாய் நிற்கும்

ஞான வேர் பாபா எனலாம்

அன்பின் விதை பாபா எனலாம்

தர்ம நீர் பாபா எனலாம்

வாழும் நிஜம் பாபா எனலாம்

எல்லாம் தோராயம் ஆகும் - முற்றும்

சொன்னதாய் ஆக மாட்டா


அசடு போல் அவன் சிரிப்பான்

அன்னை போல் ஆதரிப்பான்

கசடரைக் கூட உள்ளங்

கையிலே ஏந்திக் கொள்வான்

விசையிலா பொம்மை போலே

விரக்தியில் நிற்போர் முன்னே

திசையெலாம் தானே நின்று

செல்கதி அருள்வான் கண்டீர்


கலை கொண்டு வந்தால்

தானே கட்டுண்டு ரசிகன் ஆவான்

இலை கொண்டு வ்ந்தால்

தானே இன்சுவை அமுதம் ஆவான்

வலை கொண்டு வந்தால்

தானே வந்தங்கு சிக்கிக் கொள்வான்

விலை கொண்டு வந்தால் கொஞ்சம்

விளையாடிப் பார்ப்பான் கண்டீர்


திட்டுவான் கோபக்காரன்

தித்திக்குதே என்பார்கள்

குட்டுவான் குறும்புக்காரன்

கொடுத்து வைத்தோம் என்பார்கள்

முட்டுவான் கன்றைப் போலே

முத்தமிட்டான் என்பார்கள்

வட்டவான் மதி முகத்தான்

வசியந்தான் செய்வான் போலும்


பைத்தியம் தன்னைச் சுற்றி

பத்துப் பேர் இருப்பார் - இந்த

பைத்தியம் தன்னைச் சுற்றி

பத்து பத்தாயிரம் பேர்

பைத்திய அளவுக்கேற்ப

தொகை கூடும் போலும் - இந்த

பைத்திய நாதனைப்போல்

வைத்திய நாதன் இல்லை


பித்தனா ? ஆமாம். ஆனால்

பித்தர்க்குப் பித்தன் கண்டீர்

பக்தனா ? ஆமாம். ஆனால்

பக்தர்க்கு பக்தன் கண்டீர்

முக்தனா ? ஆமாம். ஆனால்

முக்தர்க்கு முக்தன் கண்டீர்

சித்தனா ? ஆமாம். ஆனால்

சித்தர்க்கு சித்தன் கண்டீர்


கோபாலன் பாபா ஆனான்

கோவிந்தன் பாபா ஆனான்

பூபாளன் பாபா ஆனான்

புகழ் ராமன் பாபா ஆனான்

பூபாரம் தாங்க வந்த

புதுக் க்ருஷ்ணன் பாபா ஆனான்

பாபாவைப் பார்க்க வாரீர்

பாபாவாய் ஆக வாரீர்


அன்புக்குள் கருவாய் ஆகி

அன்புக்குள் உருவாய் ஆகி

அன்புக்குள் திருவாய் ஆன

அன்புக்குப் பேர்தான் பாபா

மண்புக்குத் தெய்வம் வந்து

மனிதரை ஆண்டு கொள்ளும்

அன்புக்குப் பெயர்தான் பாபா

அவதார அன்பு பாபா


முன்னாடி நின்று கொண்டு

முகம் பார்க்கும் வேளை - அந்த

கண்ணாடி தன்னில் நீங்கள்

காண்பது அவனைத் தானே

பெண்மானே! ஆணே! உங்கள்

பெருங்குறை தனை உணர்ந்து

பெம்மானில் உம்மைக் கண்டு

பெருமானாய் ஆக வாரீர்


மாபெரும் யானை மேலே

மாவுத்தன் பிள்ளை ஏறி

கூவிடும் குதிக்கும் சின்ன

குறும்புகள் செய்யும் - ஆனால்

ஓவியம் போலே யானை

உட்கார்ந்து கிடக்கும் - அந்த

கோபுர யானை பாபா

குழந்தைகள் நாங்கள் கண்டீர்


 
 
 

Recent Posts

See All
Yaar unakku sondham

Yaar unakku sondham - ulagil yaedhu unakku bandham paar en visvarupam - nee padi en geethai enraan - ulagil anda kolamellaam ennul...

 
 
 
Yaaraadinaar ini

Yaaraadinaar ini yaaraduvaar ponnambala vaanan Siva Shankaran pol ini anru tholaadaiyodu.....puli tholaadaiyodu thillai therodum...

 
 
 
Yaedhu gathi unakku

Yaedhu gathi unakku en nenjae yaezhai pangaalanaam engal Sivashankaranri needhi neri muraigal nilai niruththa udhiththa aadhi bagavanivan...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page