Yaar unakku sondham
- SamratchanaLyrics
- Feb 15, 2019
- 1 min read
Yaar unakku sondham - ulagil
yaedhu unakku bandham
paar en visvarupam - nee
padi en geethai enraan - ulagil
anda kolamellaam ennul
adakkamenru sonnaan
anaiththu uyirgalellaam endhan
anuvil uthiththathenraan
pindamaaga thonri parpala
peyaril vaazhumenraan
pirappu irappu ellaam endhan
pidikkkul ulladhenraan - ulagil
vaazhvil inba thunbam - naan
varaindha kottul enraan - un
varavu selavu ellaam - nee
vaangiya varamenraan
tholviyil thuvalaadhae - naan
thol koduppaenenraan
paavi ena varundhaadhe
padham thandhen urudhi enraan - ulagil
manidha piravi thandhaen - uyarvura
marandhidaadhe enraan
punidha gunangal kondaal - ennul
puguga enru sonnaan
anuppumpodhu azhuvaar - thirumba
azhaikkumpodhu sirippaar - idhu
aanmaavin anubavam - idhai nee
arindhu kolga enraan - ulagil
யார் உனக்கு சொந்தம் உலகில் ஏது உனக்கு பந்தம்
பார் என் விஸ்வரூபம் நீ படி என் கீதை என்றான் - உலகில்
அண்ட கோளமெல்லாம் என்னுள் அடக்கமென்று சொன்னான்
அனைத்து உயிர்களெல்லாம் எந்தன் அணுவில் உதித்ததென்றான்
பிண்டமாக தோன்றி பற்பல பெயரில் வாழுமென்றான்
பிறப்பு இறப்பு எல்லாம் எந்தன் பிடிக்குள் உள்ளதென்றான் - உலகில்
வாழ்வில் இன்ப துன்பம் நான் வரைந்த கோட்டுள் என்றான் - உன்
வரவு செலவு எல்லாம் நீ வாங்கிய வரமென்றான்
தோல்வியில் துவளாதே நான் தோள் கொடுப்பேனென்றான்
பாவி என வருந்தாதே பதம் தந்தேன் உறுதி என்றான் - உலகில்
மனித பிறவி தந்தேன் உயர்வுர மறந்திடாதே என்றான்
புனித குணங்கள் கொண்டால் என்னுள் புகுக என்று சொன்னான்
அனுப்பும்போது அழுவார் திரும்ப அழைக்கும்போது சிரிப்பார் - இது
ஆன்மாவின் அனுபவம் இதை நீ அறிந்து கொள்க என்றான் - உலகில்
Comentários