Yaedhu gathi unakku
- SamratchanaLyrics
- Feb 15, 2019
- 1 min read
Yaedhu gathi unakku en nenjae
yaezhai pangaalanaam engal Sivashankaranri
needhi neri muraigal nilai niruththa udhiththa
aadhi bagavanivan arul kudai nizhalanri
naadhi enakkillai enru nee varundhaadhae
nambi ivananri allaarai naadaadhae
theedhu sei kolgal unnai theendidum podhil
vaadhida unakkena vandhavan ivananri
anbin thiru uruvaay avanithanil vandhaan
aatralai nam narambil thotruvikka thaviththaan
nanban naayagan nallaasiriyanaay
panbilae nee uyara parithavikka ivananri
ஏது கதி உனக்கு என் நெஞ்சே
ஏழைப் பங்காளனாம் எங்கள் சிவசங்கரன்றி
நீதி நெறிமுறைகள் நிலை நிறுத்த உதித்த
ஆதி பகவனிவன் அருட்குடை நிழலன்றி
நாதி எனக்கில்லை என்று நீ வருந்தாதே
நம்பி இவனன்றி அல்லாரை நாடாதே
தீது செய் கோள்கள் உன்னை தீண்டிடும் போதில்
வாதிட உனக்கென வந்தவன் இவனன்றி
அன்பின் திருவுருவாய் அவனிதனில் வந்தான்
ஆற்றலை நம் நரம்பில் தோற்றுவிக்க தவித்தான்
நண்பன் நாயகன் நல்லாசிரியனாய்
பண்பிலே நீ உயர பரிதவிக்க இவனன்றி
Comments