Yaarindha Sivashankar Baba
- SamratchanaLyrics
- Feb 15, 2019
- 2 min read
Yaarindha Sivashankar baba - inru
oorengum ulagengum olikkinra mudhal kaelvi
kaavi udai tharippadhillai
jaathi madham paarppadhillai
yaarindha Sivashankar baba
kadaa mudaa vaarththai illai - thiruppi
kai oangum pazhakkamillai
yaarindha Sivashankar baba
edhirppor mun achcham illai
igazhvorai igazhvadhillai
yaarindha Sivashankar baba
yaar meedhum vanjam illai
anbukkor panjam illai
yaarindha Sivashankar baba
poorveega thavayogam pudam potta meignaanam
saerndhisaikkum dhaevaraagam - idhudhaan
Sivashankar babavin rupam
ivarai purindhu kondaal adhu un baakkiyam - indha
punniyan kural vaedha vaakkiyam
koteeswaran pillai sivashankar baba
kodukka mattum therindhavar dhaan sivashankar baba
thaedi adaiyum padham sivashankar baba [yaavarum]
enrum thevittaadha thellamudham sivashankar baba
mull vaeli illaamal mugam kaattum roja - pudhiya
muththamizh sangamthaan sivashankar baba
ullaththai kollayadippadhil uvakkinra raja - idhilae
ulaga mahaa thirudan sivashankar baba
igazhchikkum pugazhchikkum ettaadha uyaram - baba
imayaththil thavam seidha imayaththin imayam
magizhchiyum nimmadhiyum pozhiginra idhayam - oru
magaththaana aanmeega puyal ingu udhayam
asthamanaththaiyum udhayakaalamaay
aakkidum aanmeegam - than
chiththapadiyae dheiva vadivangal
sedhukkidum dheiveegam
sadhaiyai thaedum manidhargal maththiyil
saththiyam thaedum maa manidhan
edhaiyum unnidam edhirpaarkkaamal
idhayam kaetkum maa munivan
ivarai purindhu kondaal adhu un baakkiyam - indha
punniyan kural vaedha vaakkiyam
யாரிந்த சிவசங்கர் பாபா - இன்று
ஊரெங்கும் உலகெங்கும் ஒலிக்கின்ற முதல் கேள்வி
காவி உடை தரிப்பதில்லை
ஜாதி மதம் பார்ப்பதில்லை
யாரிந்த சிவசங்கர் பாபா
கடாமுடா வார்த்தை இல்லை - திருப்பி
கை ஓங்கும் பழக்கமில்லை
யாரிந்த சிவசங்கர் பாபா
எதிர்ப்போர் முன் அச்சம் இல்லை
இகழ்வோரை இகழ்வதில்லை
யாரிந்த சிவசங்கர் பாபா
யார் மீதும் வஞ்சம் இல்லை
அன்புக்கோர் பஞ்சம் இல்லை
யாரிந்த சிவசங்கர் பாபா
பூர்வீகத் தவயோகம் புடம் போட்ட மெய்ஞானம்
சேர்ந்திசைக்கும் தேவராகம் இதுதான் சிவசங்கர் பாபாவின் ரூபம்
இவரை புரிந்து கொண்டால் அது உன் பாக்கியம் - இந்த
புண்ணியன் குரல் வேத வாக்கியம்
கோடீஸ்வரன் பிள்ளை சிவசங்கர் பாபா
கொடுக்க மட்டும் தெரிந்தவர்தான் சிவசங்கர் பாபா
தேடி அடையும் பதம் சிவசங்கர் பாபா [யாவரும்]
என்றும் தெவிட்டாத தெள்ளமுதம் சிவசங்கர் பாபா
முள்வேலி இல்லாமல் முகம் காட்டும் ரோஜா - புதிய
முத்தமிழ் சங்கம்தான் சிவசங்கர் பாபா
உள்ளத்தை கொள்ளையடிப்பதில் உவக்கின்ற ராஜா - இதிலே
உலக மகா திருடன் சிவசங்கர் பாபா
இகழ்ச்சிக்கும் புகழ்ச்சிக்கும் எட்டாத உயரம் - பாபா
இமயத்தில் தவம் செய்த இமயத்தின் இமயம்
மகிழ்ச்சியும் நிம்மதியும் பொழிகின்ற இதயம் - ஒரு
மகத்தான ஆன்மீகப் புயல் இங்கு உதயம்
அஸ்தமனத்தையும் உதயகாலமாய் ஆக்கிடும் ஆன்மீகம் - தன்
சித்தப்படியே தெய்வ வடிவங்கள் செதுக்கிடும் தெய்வீகம்
சதையைத் தேடும் மனிதர்கள் மத்தியில் சத்தியம் தேடும் மாமனிதன்
எதையும் உன்னிடம் எதிர்பார்க்காமல் இதயம் கேட்கும் மாமுனிவன்
இவரை புரிந்து கொண்டால் அது உன் பாக்கியம் - இந்த
புண்ணியன் குரல் வேத வாக்கியம்
Comentarios