Vizhi varumo undhan
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 1 min read
Vizhi varumo undhan karam varumo - en
vinaigal azhindhida varam tharumo
pazhi varumo vaazhvu payan perumo - nin
paadhaara vindham thunai varumo
manakkurangu engum thaavidumo - adhai
maayai enum thalai siraiyidumo
thanakkuvamai illaa Sivashankara - adhai
thaduththu pidikka un arul varumo
dhanam vandhadhaaL thalai ganam varumo
thaan ennum agandhai thimiridumo
sinam ennum gunamilla Sivashankara - un
siriya padham thulli midhiththidumo
விழி வருமோ உந்தன் கரம் வருமோ - என்
வினைகள் அழிந்திட வரம் தருமோ
பழி வருமோ வாழ்வு பயன் பெறுமோ - நின்
பாதார விந்தம் துணை வருமோ
மனக்குரங்கு எங்கும் தாவிடுமோ - அதை
மாயை எனும் தளை சிறையிடுமோ
தனக்குவமை இல்லா சிவசங்கரா - அதை
தடுத்துப் பிடிக்க உன் அருள் வருமோ
தனம் வந்ததால தலை கனம் வருமோ
தான் என்னும் அகந்தை திமிறிடுமோ
சினம் என்னும் குணமில்லா சிவசங்கரா - உன்
சிறிய பதம் துள்ளி மிதித்திடுமோ
Comments