Vaanavarum Kaana Varum
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 1 min read
வானவரும் காணவரும் சித்திரக் கூடம்
ஸ்ரீ ராமனவன் பாதம் வைத்த ப்ரம்ம பீடம் - இதுவே
ஞானியர்கள் தவமியற்றும் தபோவனம்
நானிலத்தோர் கண்டு மகிழும் ப்ருந்தாவனம் - இது
வேங்கடத்தோன் அருள் செய்யும் பேராலயம்
வெம்பி வந்த மனம் தேற்றும் சரணாலயம்
காஞ்சிமகான் வீற்றிருக்கும் கருணாலயம்
ஸ்ரீ ராகவேந்த்ரர் ஆசி பெற்ற மந்த்ராலயம் - இது
மனதினிலே ஆனந்தம் மலர்த்தும் ராஜ்ஜியம் - பல
மகான்களின் வார்த்தையிலே உதித்த ராஜ்ஜியம்
கனவிதுவோ காண்பதெனும் காட்சி ராஜ்ஜியம் - எங்கள்
கருணைத் தெய்வம் சிவசங்கர ராம ராஜ்ஜியம் - இது
Комментарии