Vaalaal aruththu chudinum
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 1 min read
Vaalaal aruththu chudinum maruththuvan paal
maalaadha kaadhal kolgiraay - vidhi
maala aruththu saayppaan - avanai
kaanaamalae vaazhgiraay - unnai
yaar yaarin pinnaalo alaindhu
vaazhnaalil pala tholaiththaay - indha
paar aala vandhavan thaan - ivanai
yaaro enru ninaiththaay - unnai
paalaaru perugi vara - parugum
dhaagam unnilirukka
yaedhaaru yaen vandhadhu enra
aaraaychigal thaevaiyaa
kolaaru un kannilae - konal
paarvaiyai maatrikkol - yaedhum
kooraamal varam tharuvaan - Shankaran
unmaiyai oththu koll - unnai
வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பால்
மாளாத காதல் கொள்கிறாய் - விதி
மாள அறுத்து சாய்ப்பான் - அவனை
காணாமலே வாழ்கிறாய் - உன்னை
யார் யாரின் பின்னாலோ அலைந்து
வாழ்நாளில் பல தொலைத்தாய் - இந்த
பார் ஆள வந்தவன் தான் - இவனை
யாரோ என்று நினைத்தாய் - உன்னை
பாலாறு பெருகி வர - பருகும்
தாகம் உன்னிலிருக்க
ஏதாறு ஏன் வந்தது - என்ற
ஆராய்ச்சிகள் தேவையா
கோளாறு உன் கண்ணிலே - கோணல்
பார்வையை மாற்றிக் கொள் - ஏதும்
கோராமல் வரம் தருவான் - சங்கரன்
உண்மையை ஒத்துக் கொள் - உன்னை
Kommentare