Vaadi Kannaara
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 1 min read
வாடி கண்ணாரக் காணலாம் வையம் அளந்தவனை
வணங்கி அமைதி பெறலாம் சிவசங்கரனை
ஓடி ஓடி அலைந்து ஊருக்குழைப்பவனை
தேடிப் பிடித்து அவன் காலைப் பிடித்துவிட
வாடி தவித்தவரை வாழ்த்தி நிலை உயர்த்தி
வாழ்வின் பொருள் கூறி வந்த காரியம் உரைத்து
ஊடித்திரிந்தவரை கூடி மகிழ வைத்து
உற்சாகக் காற்றாக உயரே பறப்பவனை
கோடி மகான் அழைத்த பூலோக கைலாசமிவன்
யோகிராம் சூரத்குமார் கண்ட இறைவனிவன்
காஞ்சி மகான் கணித்த ஸ்ரீ மஹா ஜோதியிவன்
வாஞ்சை நம்மேல் வைத்து வையத்துதித்தவனை
பெற்றவர்க்குப் பெருமை சேர்த்த தனயன் இவன்
மற்ற சொந்தங்களெல்லாம் மறுத்துக் கிளம்பியவன்
கற்றதெல்லாம் முருகன் தந்த வரமென்பவன்
கருணை மிகவே கொண்ட அருணைத் தலைவனை
அஞ்சுதல் தவிர்த்த அரும்பெரும் தலைவனை
அகம் புறம் இரண்டும் ஒரு நிறமானவனை
வஞ்சகம் களைந்திட வலிய எழுபவனை
வானும் மண்ணும் போற்றும் தீனதயாபரனை
Comments