Vilaiyaattu bommaiyenro nee
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 1 min read
Vilaiyaattu bommaiyenro nee ninaiththaay - enai
vidhi kaattum paadhaiyilae oada vaiththaay [amma]
kalai koottum meen vizhiyil aada vaiththaay - katra
kalai kaatti un vasamae kavarndhizhuththaay amma
urugattum ena ninaiththo thuyar koththaay - adhil
oadum kanneerinil nee nadanamittaay
enai meetti un ezhilai paada vaiththaay - adhai
thalai aatti nee rasiththu thaalamittaay amma
விளையாட்டு பொம்மையென்றோ நீ நினைத்தாய் - என்னை
விதி காட்டும் பாதையிலே ஓட வைத்தாய் - அம்மா
களை கூட்டும் மீன் விழியில் ஆட வைத்தாய் - கற்ற
கலை காட்டி உன் வசமே கவர்ந்திழுத்தாய் அம்மா
உருகட்டும் என நினைத்தோ துயர் கொடுத்தாய் - அதில்
ஓடும் கண்ணீரினில் நீ நடனமிட்டாய்
எனை மீட்டி உன் எழிலைப் பாட வைத்தாய் - அதைத்
தலை ஆட்டி நீ ரசித்துத் தாளமிட்டாய் அம்மா
Comments