top of page

Vidhi vidhi enru

  • SamratchanaLyrics
  • Feb 17, 2019
  • 1 min read

Vidhi vidhi enru neeyum sollalaaguma? - emai

virakthi athan ellaiyile thallalaaguma?


gadhi enru vandha nenjam kalangi vidaadha?

kanna un manam satre emakkirangaadha?


kaalanukkum kaalanaana eesanallava?

kannappanai aatkonda dheivamallava?

pillai kari kettu petra pithanallava?

periraiye emai kaaththal un kadamai allava?


kanthanile kaththi paayndhaal udal thudikkaadha? - em

kadharum kural kettum undhan manam ilagaatha?

asurarukkum varam koduththa anbu ullame - indha

abalaiyarkkum un paadha malargal thanjame


விதி விதி என்று நீயும் சொல்லலாகுமா? - எமை

விரக்தி அதன் எல்லையிலே தள்ளலாகுமா?


கதி என்று வந்த நெஞ்சம் கலங்கி விடாதா?

கண்ணா உன் மனம் சற்றே எமக்கிரங்காதா?


காலனுக்கும் காலனான ஈசனல்லவா? - நீ

கண்ணப்பனை ஆட் கொண்ட தெய்வமல்லவா?

பிள்ளைக் கறி கேட்டு பெற்ற பித்தனல்லவா?

பேரிறையே எமை காத்தல் உன் கடமை அல்லவா?


கண்தனிலே கத்தி பாய்ந்தால் உடல் துடிக்காதா? - எம்

கதறும் குரல் கேட்டும் உந்தன் மனம் இளகாதா?

அசுரருக்கும் வரம் கொடுத்த அன்பு உள்ளமே - இந்த

அபலையர்க்கும் உன் பாத மலர்கள் தஞ்சமே



 
 
 

Recent Posts

See All
Vaa muruga padham

Audio: https://drive.google.com/file/d/1WfHp0C6oyv6Y14OvdXNr6uhwsA1RbA1V/view?usp=sharing Vaa muruga padham thaa muruga - vadi vael...

 
 
 
Vaadi Kannaara

வாடி கண்ணாரக் காணலாம் வையம் அளந்தவனை வணங்கி அமைதி பெறலாம் சிவசங்கரனை ஓடி ஓடி அலைந்து ஊருக்குழைப்பவனை தேடிப் பிடித்து அவன் காலைப்...

 
 
 
Vaanavarum Kaana Varum

வானவரும் காணவரும் சித்திரக் கூடம் ஸ்ரீ ராமனவன் பாதம் வைத்த ப்ரம்ம பீடம் - இதுவே ஞானியர்கள் தவமியற்றும் தபோவனம் நானிலத்தோர் கண்டு மகிழும்...

 
 
 

Commentaires


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page