Veleduththu Odi Va
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 1 min read
வேலெடுத்து ஓடி வா முருகையா - எவரும்
சூல் தரித்து பெற்றிடாத ஸ்ரீ சுப்ரமண்யா
கால் கடுக்க பழனியில் தனியாய் நிற்பவனே
நான் உனக்குத் துணையாக வரலாமோ என் ஐயனே
பால் முகத்துப் பிள்ளையென நினைந்திருந்தேன் - நீ
வேல் தரித்து சூரர் படை வென்று விட்டாய்
நாலெழுத்து அறியாத மூட நெஞ்சில்
நீ எழுத்தாய் வந்தாய் உன் புகழை எழுத
கால் பதித்த பூமியைக் கைலாயமாக்கினாய்
கதிரவன் எழுமுன் நின்கால் பணிய வைத்தாய்
மாலவனை திகைக்க வைத்த மாமேதையே - நின்
மலர்க் கரத்தால் ஆசி செய்வாய் ஸ்ரீ சிவசங்கரனே
Comments