Velai Irukkiradhu
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 5 min read
Updated: Jul 14, 2020
Audio:
Velai irukkiradhu niramba - ennai
vaegappaduththi vidu thaaye - un
kaalai pidiththiranjuginraen - ellaam
kai kooda vaiththidadi maaye
saelai thalaippai pidiththu
saei naan unai thodarndhu varuvaen - en
sthoolaththin ullae sirikkum - indha
sootchumam unarththi vidu amma
kaala kannaadiyai endhan
kaiyil koduththu vidu amma - adhan
maalaththul naanum aazhaamal - en
manaththai thaduththi vidu amma
thannai ariyaadha maandhar - avar
thagudhi unarththi vida vaendum - avar
ullae urangum thava neruppai - nee
oodhi eriya vida vaendum
pollaadha pillai enraalum - avar
ellaamumae pera vaendum
illaamaiyai yaezhu ulagum - nee
illaadhu seidhu vida vaendum
sogaththilae kumurum boomi - adhai
sorkka puriyaakka vaendum
yaagangal homangal seidhu - bakthi
yogappayir valarkka vaendum
ulaga maandharai vaattum
oozh vinaigal pokka vaendum
kalagaththil magizhginra paerai - siru
kanaththul manam maatra vaendum
ilaignargalai thiratta vaendum - pudhu
ezhuchchi avarkkul thara vaendum
kalaigalelaam sirakka vaendum - pudhu
kavidhai unai paada vaendum
anbenum kodi padara vaendum - adhil
arul malargal pookka vaendum
panbukkani parikka vaendum - manam
pakkuvam adaindhida vaendum
needhi thalai nimira vaaendum - uyar
nerigallingu thazhaikka vaendum
paranjothi unai ariya vaendum
arul surandhu perugi vara vaendum
silaigalukkul nirkum dheivam - un pol
siriththu ulaa vara vaendum
malai pol unai nambi varuvor - avar
maalaa thuyar pokka vaendum
kolai kayilaendhi adhatti - nava
kolai adakkividum thaayae - indha
oalai unakkanuppi vaiththaen - amma
udan badhil nee thara vaendum
வேலை இருக்கிறது நிரம்ப - என்னை
வேகப்படுத்தி விடு தாயே - உன்
காலைப்பிடிதிறைஞ்சுகின்றேன் - எல்லாம்
கைகூட வைத்திடடி மாயே
சேலைத் தலைப்பைப் பிடித்து
சேய் நான் உனை தொடர்ந்து வருவேன் - என்
ஸ்தூலத்தின் உள்ளே சிரிக்கும் - இந்த
சூட்சுமம் உணர்த்தி விடு அம்மா
காலக் கண்ணாடியை எந்தன்
கையில் கொடுத்து விடு அம்மா - அதன்
மாலத்துள் நானும் ஆழாமல் - என்
மனத்தை தடுத்து விடு அம்மா
தன்னை அறியாத மாந்தர் - அவர்
தகுதி உணர்த்தி விட வேண்டும் - அவர்
உள்ளே உறங்கும் தவ நெருப்பை - நீ
ஊதி எறிய விட வேண்டும்
பொல்லாத பிள்ளை என்றாலும் - அவர்
எல்லாமுமே பெற வேண்டும்
இல்லாமையை ஏழு உலகும் - நீ
இல்லாது செய்து விட வேண்டும்
சோகத்திலே குமுறும் பூமி - அதை
சொர்க்க புரியாக்க வேண்டும்
யாகங்கள் ஹோமங்கள் செய்து - பக்தி
யோகப்பயிர் வளர்க்க வேண்டும்
உலக மாந்தரை வாட்டும்
ஊழ்வினைகள் போக்க வேண்டும்
கலகத்தில் மகிழ்கின்றபேரை - சிறு
கணத்துள் மனம் மாற்ற வேண்டும்
இளைஞர்களை திரட்ட வேண்டும் - புது
எழுச்சி அவர்க்குள் தர வேண்டும்
கலைகளெல்லாம் சிறக்க வேண்டும் - புது
கவிதை உனைப் பாட வேண்டும்
அன்பெனும் கொடி படர வேண்டும் - அதில்
அருள் மலர்கள் பூக்க வேண்டும்
பண்புக்கனி பறிக்க வேண்டும் - மனம்
பக்குவம் அடைந்திட வேண்டும்
நீதி தலை நிமிர வேண்டும் - உயர்
நெறிகளிங்கு தழைக்க வேண்டும்
பரஞ்ஜோதி உனை அறிய வேண்டும்
அருள் சுரந்து பெருகி வர வேண்டும்
சிலைகளுக்குள் நிற்கும் தெய்வம் - உன்போல்
சிரித்து உலா வர வேண்டும்
மலை போல் உனை நம்பி வருவோர் - அவர்
மாளாத்துயர் போக்க வேண்டும்
கோலைக் கையிலேந்தி அதட்டி - நவ
கோளை அடக்கிவிடும் தாயே - இந்த
ஓலை உனக்கனுப்பி வைத்தேன் - அம்மா
உடன் பதில் நீ தர வேண்டும்
Meaning
வேலை இருக்கிறது - Velai Irukkiradhu
வேலை இருக்கிறது நிரம்ப - என்னை
(Velai irukkiradhu niramba - ennai)
I have lots of work to do
வேகப்படுத்தி விடு தாயே - உன்
(vaegappaduththi vidu thaaye - un)
Oh mother goddess, boost me with speed and energy
காலைப்பிடிதிறைஞ்சுகின்றேன் - எல்லாம்
(kaalai pidiththiranjuginraen - ellaam)
I am holding your lotus feet and begging
கைகூட வைத்திடடி மாயே
(kai kooda vaiththidadi maaye)
Oh mother Paravthi, make everything successful
Summary 1: I have lots of work to do, Oh mother goddess, boost me with speed and energy, I am holding your lotus feet and begging and Oh mother Paravthi, make everything successful
சேலைத் தலைப்பைப் பிடித்து
(saelai thalaippai pidiththu)
By holding the edge of your saree
சேய் நான் உனை தொடர்ந்து வருவேன் - என்
(saei naan unai thodarndhu varuvaen - en)
As your child, I will come following you
ஸ்தூலத்தின் உள்ளே சிரிக்கும் - இந்த
(sthoolaththin ullae sirikkum - indha)
You are laughing inside me
சூட்சுமம் உணர்த்தி விடு அம்மா
(sootchumam unarththi vidu amma)
Oh mother goddess, make me realize the secret
Summary 2: By holding the edge of your saree, As your child, I will come following you. You are laughing inside me and Oh mother goddess, make me realize the secret
காலக் கண்ணாடியை எந்தன்
(kaala kannaadiyai endhan)
Future predicting mirror
கையில் கொடுத்து விடு அம்மா - அதன்
(kaiyil koduththu vidu amma - adhan)
Oh mother goddess, you need to give it in my hand
மாலத்துள் நானும் ஆழாமல் - என்
(maalaththul naanum aazhaamal - en)
I should not get lost in the illusions
மனத்தை தடுத்து விடு அம்மா
(manaththai thaduththi vidu amma)
You need to stop my heart desires
தன்னை அறியாத மாந்தர் - அவர்
(thannai ariyaadha maandhar - avar)
People not realising whom they are
தகுதி உணர்த்தி விட வேண்டும் - அவர்
(thagudhi unarththi vida vaendum - avar)
You should make them understand their potential
உள்ளே உறங்கும் தவ நெருப்பை - நீ
(ullae urangum thava neruppai - nee)
Penance fire is sleeping inside them
ஊதி எறிய விட வேண்டும்
(oodhi eriya vida vaendum)
You need to kindle the fire
Summary 3: Oh mother goddess, you need to give the future predicting mirror in my hand, I should not get lost in the illusions, You need to stop my heart desires, People not realising whom they are, You should make them understand their potential , Penance fire is sleeping inside them, You need to kindle the fire
பொல்லாத பிள்ளை என்றாலும் - அவர்
(pollaadha pillai enraalum - avar)
Even the troublesome child
எல்லாமுமே பெற வேண்டும்
(ellaamumae pera vaendum)
Should also get everything
இல்லாமையை ஏழு உலகும் - நீ
(illaamaiyai yaezhu ulagum - nee)
Poverty from the seven worlds
இல்லாது செய்து விட வேண்டும்
(illaadhu seidhu vida vaendum)
You need to remove it
சோகத்திலே குமுறும் பூமி - அதை
(sogaththilae kumurum boomi - adhai)
World is crying in sadness
சொர்க்க புரியாக்க வேண்டும்
(sorkka puriyaakka vaendum)
You need to make it as heaven on earth
யாகங்கள் ஹோமங்கள் செய்து - பக்தி
(yaagangal homangal seidhu - bakthi)
By doing fire worship and fire offerings
யோகப்பயிர் வளர்க்க வேண்டும்
(yogappayir valarkka vaendum)
You need to nourish the growth of the plant called devotion
Summary 4: Even the troublesome child , Should also get everything , Poverty from the seven worlds, You need to remove it, World is crying in sadness , You need to make it as heaven on earth , By doing fire worship and fire offerings , You need to nourish the growth of the plant called devotion
உலக மாந்தரை வாட்டும்
(ulaga maandharai vaattum)
People around the world is suffering
ஊழ்வினைகள் போக்க வேண்டும்
(oozh vinaigal pokka vaendum)
You need to remove their past bad deeds effects
கலகத்தில் மகிழ்கின்றபேரை - சிறு
(kalagaththil magizhginra paerai - siru)
People who enjoying in gossiping
கணத்துள் மனம் மாற்ற வேண்டும்
(kanaththul manam maatra vaendum)
You need to change their minds in a split of second
இளைஞர்களை திரட்ட வேண்டும் - புது
(ilaignargalai thiratta vaendum - pudhu)
Gather young people
எழுச்சி அவர்க்குள் தர வேண்டும்
(ezhuchchi avarkkul thara vaendum)
you need to give new strength and confidence in them
கலைகளெல்லாம் சிறக்க வேண்டும் - புது
(kalaigalelaam sirakka vaendum - pudhu )
Art and cluture should flourish
கவிதை உனைப் பாட வேண்டும்
(kavidhai unai paada vaendum)
Sing new poems in praise of you
Summary 5: People around the world is suffering , You need to remove their past bad deeds effects , People who enjoying in gossiping, You need to change their minds in a split of second , Gather young people, you need to give new strength and confidence in them, Art and cluture should flourish , Sing new poems in praise of you
அன்பெனும் கொடி படர வேண்டும் - அதில்
(anbenum kodi padara vaendum - adhil )
Love vine plant should grow spreading rapidly
அருள் மலர்கள் பூக்க வேண்டும்
(arul malargal pookka vaendum)
Flower called grace should blossom beautifully
பண்புக்கனி பறிக்க வேண்டும் - மனம்
(panbukkani parikka vaendum - manam)
Fruit called good character should be harvested
பக்குவம் அடைந்திட வேண்டும்
(pakkuvam adaindhida vaendum)
Our minds should strike a balance and maturity
நீதி தலை நிமிர வேண்டும் - உயர்
(needhi thalai nimira vaaendum - uyar)
Justice should be retrieved and served
நெறிகளிங்கு தழைக்க வேண்டும்
(nerigallingu thazhaikka vaendum)
Highest behavioral quality should flourish
பரஞ்ஜோதி உனை அறிய வேண்டும்
(paranjothi unai ariya vaendum)
Holy divine light, we should realize you
அருள் சுரந்து பெருகி வர வேண்டும்
(arul surandhu perugi vara vaendum)
Grace should ooze and come overflowing
Summary 6: Love vine plant should grow spreading rapidly, Flower called grace should blossom beautifully, Fruit called good character should be harvested, Our minds should strike a balance and maturity, Justice should be retrieved and served , Highest behavioral quality should flourish , Holy divine light, we should realize you, Grace should ooze and come overflowing
சிலைகளுக்குள் நிற்கும் தெய்வம் - உன்போல்
(silaigalukkul nirkum dheivam - un pol)
God present inside the idols
சிரித்து உலா வர வேண்டும்
(siriththu ulaa vara vaendum)
Should come laughing and marching like you
மலை போல் உனை நம்பி வருவோர் - அவர்
(malai pol unai nambi varuvor - avar)
Devotees come to you with faith on you as big as a mountain
மாளாத்துயர் போக்க வேண்டும்
(maalaa thuyar pokka vaendum)
You should remove their sufferings
கோலைக் கையிலேந்தி அதட்டி - நவ
(kolai kayilaendhi adhatti - nava)
Take the trident in your hand and rebuke
கோளை அடக்கிவிடும் தாயே - இந்த
(kolai adakkividum thaayae - indha)
oh mother Parvathi, control the nine planets
ஓலை உனக்கனுப்பி வைத்தேன் - அம்மா
(oalai unakkanuppi vaiththaen - amma)
Oh mother goddess, I sent you a message
உடன் பதில் நீ தர வேண்டும்
(udan badhil nee thara vaendum)
You should give an answer immediately
Summary 7: God present inside the idols , Should come laughing and marching like you , Devotees come to you with faith on you as big as a mountain , You should remove their sufferings, Take the trident in your hand and rebuke,oh mother Parvathi, control the nine planets , Oh mother goddess, I sent you a message , You should give an answer immediately
Comentários