Vel muruga undhan
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 2 min read
Vel muruga undhan thaal panindhu ninraen
vaendum varam arulae
thaen thamizhil unai paada pala kavi
dhaeva enakkarulae
naaradhar aliththa maangkani adhanai
thaanae peruvadharkae
yaeru mayilinil yaezhu ulagamum
yaegi vandha kumara
aanai muganavan ammaiyappanai
sutri kaniyai pera - adhai
kaana kadunjinam maevi pazhaniyil
aandiyaana muruga
pranava porul kaettu brammadhevan thanai
siraiyiladaiththa muruga
parama sivanukkavan madiyilamarndhu
upadhaesam seidha thalaiva
sharanam sharanamena varumadiyarkku
maru jananam illaiyenraay
varanum varanum guruguganae swamimalai
amarndha gurunaadhanae
sooran sei kodumai thaangonaadhu
muni dhevar muraiyidavae
veeramodu perum porthanai purindhu
vetri kuviththa muruga
saevalai kodiyaay vaaganam mayilaay
yaetra guruparanae
dhevasaenaithanai thirupparang kunrinil
thirumanam kondavanae
maanai thaedi vandha vaedan pola pinnae
oadi vandhu ninravaa
kaanagaththil oru vaengai maramena
thaanuyarndhu ninravaa
yaanai mugaththanai thaanazhaiththu valli
maadhinai anaiththavaa - dheva
saenaapadhiyae nee maanmagal valliyai
sendhooril kondavaa
sooranai azhiththa kobam thanindhu thiru
thanigaiyadhil amarndhavaa
maaranum mayangum paerazhagae
iru maadharudan ninravaa
arunagiri thanakku arulthanai aliththu
thiruppugazhai kondavaa
tharunam idhuvae neeyum thayai ennil vaiththida
thalaivaa viraindhodi vaa
pazhamudhir cholaiyil paravasamudanae
kaatchi tharum muruga
padhamthanai vaendidum adiyavar nenjilae
idham tharum kumara
valli dhevasaenaa samaedhanae
vadivaela guganae
pulli mayilaeri thulli nadamaadi
aadi vara vaenumae
vinnavar potrum mannadi kshethram
yaezhaam padai veedo
vaedha naayagan Sivashankaran nee
virumbi vandha koodo
kangal eeraaril karunai vazhindhoda
kaatchi tharum muruga
karam pannirandaal varangalai aruli
kaaththarul shanmuga
வேல் முருகா உந்தன் தாள் பணிந்து நின்றேன் வேண்டும் வரம் அருளே
தேன் தமிழில் உனைப் பாட பல கவி தேவா எனக்கருளே
நாரதர் அளித்த மாங்கனி அதனை தானே பெறுவதற்கே
ஏறு மயிலினில் ஏழு உலகமும் ஏகி வந்த குமரா
ஆனை முகனவன் அம்மையப்பனை சுற்றி கனியைப் பெற - அதை
காண கடுஞ்சினம் மேவி பழனியில் ஆண்டியான முருகா
ப்ரணவப் பொருள் கேட்டு ப்ரம்மதேவன் தனை சிறையிலடைத்த முருகா
பரமசிவனுக்கவன் மடியிலமர்ந்து உபதேசம் செய்த தலைவா
சரணம் சரணமென் வருமடியர்க்கு மறு ஜனனம் இல்லை என்றாய்
வரணும் வரணும் குருகுகனே ஸ்வாமிமலை அமர்ந்த குருநாதனே
சூரன் செய் கொடுமை தாங்கொணாது முனி தேவர் முறையிடவே
வீரமொடு பெரும் போர்தனை புரிந்து வெற்றி குவித்த முருகா
சேவலைக் கொடியாய் வாகனம் மயிலாய் ஏற்ற குருபரனே
தேவசேனைதனை திருப்பரங்குன்றினில் திருமணம் கொண்டவனே
மானைத் தேடி வந்த வேடன் போல பின்னே ஓடி வந்து நின்றவா
கானகத்தில் ஒரு வேங்கை மரமென தானுயர்ந்து நின்றவா
யானை முகத்தனை தானழைத்து வள்ளி மாதினை அணைத்தவா - தேவ
சேனாபதியே நீ மான்மகள் வள்ளியை செந்தூரில் கொண்டவா
சூரனை அழித்த கோபம் தணிந்து திருத்தணிகையதில் அமர்ந்தவா
மாரனும் மயங்கும் பேரழகே இரு மாதருடன் நின்றவா
அருணகிரி தனககு அருள்தனை அளித்து திருப்புகழை கொண்டவா
தருணம் இதுவே நீயும் தயை என்னில் வைத்திட தலைவா விரைந்தோடி வா
பழமுதிர்ச் சோலையில் பரவசமுடனே காட்சிதரும் முருகா
பதம்தனை வேண்டிடும் அடியவர் நெஞ்சிலே இதம் தரும் குமரா
வள்ளி தேவசேனா சமேதனே வடிவேலா குகனே
புள்ளி மயிலேறி துள்ளி நடமாடி ஆடி வர வேணுமே
விண்ணவர் போற்றும் மண்ணடி க்ஷேத்ரம் ஏழாம் படை வீடோ
வேத நாயகன் சிவசங்கரன் நீ விரும்பி வந்த கூடோ
கண்கள் ஈராறில் கருணை வழிந்தோட காட்சி தரும் முருகா
கரம் பன்னிரண்டால் வரங்களை அருளி காத்தருள் ஷண்முகா
Comments