Vanga kadalil ezhundhu
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 1 min read
Vanga kadalil ezhundhu aadum alaiyae - engal
vallal Sivashankaranai paadu alaiyae
thingaloli kandavudan thullum alaiyae - engal
thuyyan ivan kaal podiyai allu alaiyae
aadhi shankarar padhaththai thotta alaiyae - engal
aiyan Sivashankaran kaal patta alaiyae
needhi ini kidaikkumenru sollu alaiyae - andha
nimmadhiyil nee urangu velli alailyae
gnaaniyargal thaeduginra paadham thanaiyae panindhu
naeramelaam thazhuvi nirkum neela alaiyae
nithya sugam tharubavanai saerndha kadhaiyai sollaamal
nee yaeno nazhuvugiraay jaala alaiyae
vaanil nilaa vandhavudan aadum alaiyae
vallal ivan paadham thannil koodu alaiyae
yaezhaiyin kanneer niraindha uppu alaiyae - avar
yaekkam theera varangalellaam kaelu alaiyae
indhu mahaa samuthiraththil vandha alaiyae - nee
endha madhakkaararukkum sondha alaiyae
jaathi madha vaetrumaiyai saadu alaiyae - inge
sama dharma geethamonru paadu alaiyae
annal ivanai nerungi sellu alaiyae - avan
anbinilae irumaandha chella alaiyae
aananthaththilae kudhiththu thullum alaiyae - andha
anubavaththai engalukkkum sollu alaiyae
வங்க கடலில் எழுந்து ஆடும் அலையே - எங்கள்
வள்ளல் சிவசங்கரனை பாடு அலையே
திங்களொளி கண்டவுடன் துள்ளும் அலையே - எங்கள்
துய்யன் இவன் கால் பொடியை அள்ளு அலையே
ஆதி சங்கரர் பதத்தைத் தொட்ட அலையே - எங்கள்
ஐயன் சிவசங்கரன் கால் பட்ட அலையே
நீதி இனி கிடைக்குமென்று சொல்லு அலையே - அந்த
நிம்மதியில் நீ உறங்கு வெள்ளி அலையே
ஞானியர்கள் தேடுகின்ற பாதம் தனையே பணிந்து
நேரமெலாம் தழுவி நிற்கும் நீல அலையே
நித்ய சுகம் தருபவனைச் சேர்ந்த கதையைச் சொல்லாமல்
நீ ஏனோ நழுவுகிறாய் ஜால அலையே
வானில் நிலா வந்தவுடன் ஆடும் அலையே
வள்ளல் இவன் பாதம் தன்னில் கூடு அலையே
ஏழையின் கண்ணீர் நிறைந்த உப்பு அலையே - அவர்
ஏக்கம் தீர வரங்களெல்லாம் கேளு அலையே
இந்து மகா சமுத்திரத்தில் வந்த அலையே - நீ
எந்த மதக்காரருக்கும் சொந்த அலையே
சாதி மத வேற்றுமையைச் சாடு அலையே - இங்கே
சமதர்ம கீதமொன்று பாடு அலையே
அண்ணல் இவனை நெருங்கிச் செல்லு அலையே - அவன்
அன்பினிலே இறுமாந்த செல்ல அலையே
ஆனந்தத்திலே குதித்துத் துள்ளும் அலையே - அந்த
அனுபவத்தை எங்களுக்கும் சொல்லு அலையே
Comments