Vanga kadalalai oaram
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 1 min read
Vanga kadalalai oaram - ingu
vandhadhum neengidum baaram - enrum
varuvaar nalam peruvaar avar
uruvaar sugam adhanaal dhinam
aayiram aayiram aaram - ellaam
achchiva Shankar oyyaaram
Shankara dhaesigan idhayam - idhil
samaratchana sorkkam udhayam - idhu
sabaiyo thiruppadhiyo pudhu
yugamae tharu madhiyo ena
santhatham vandhikkum vidhiyum - namai
saarndhidumae sanga nidhiyum
aayiram thaamaraI virippu - andha
aanandha thaandavan sirippu - engum
alaimodhidum sivalaahiri
adhilae manam pari poivida
angangal engilum kalippu - undu
aththanai perukkum sezhippu
gnaana thamizh marai muzhakkam - engal
naayagan naavukku pazhakkam - idhu
nadhi vaariya punalo kadal
madai meeriya seyalo ena
naalthorum thaththuva vilakkam - vaana
naattavar kaetpadhu vazhakkam
thondarkku thondanaay iruppaan - ivan
thozharkku thannaiyae koduppaan - katru
thurai pogiya pulavorudan
maraiyodhiya periyor thozha
siththarkku siththanaay iruppaan - perum
piththanai polavum sirippaan
Shankara dhaevanin aattam - adhil
shakthi kumaararkku naattam - inba
sadhiraadudhu manamaae uyir
jathi podudhu dhinamae ena
sandhaththil paesudhu koottam - idhu
chandhira sooriyar thottam
வங்கக் கடலலை ஓரம் - இங்கு
வந்ததும் நீங்கிடும் பாரம் - என்றும்
வருவார் நலம் பெறுவார் அவர்
உறுவார் சுகம் அதனால் தினம்
ஆயிரம் ஆயிரம் ஆரம் - எல்லாம்
அச்சிவ சங்கர் ஒய்யாரம்
சங்கர தேசிகன் இதயம் - இதில்
சம்ரட்சணா சொர்க்கம் உதயம் - இது
சபையோ திருப்பதியோ புது
யுகமே தரு மதியோ என
சந்ததம் வந்திக்கும் விதியும் - நமைச்
சார்ந்திடுமே சங்க நிதியும்
ஆயிரம் தாமரை விரிப்பு - அந்த
ஆனந்தத் தாண்டவன் சிரிப்பு - எங்கும்
அலைமோதிடும் சிவலாஹிரி
அதிலே மனம் பறிபோய்விட
அங்கங்கள் எங்கிலும் களிப்பு - உண்டு
அத்தனை பேருக்கும் செழிப்பு
ஞானத் தமிழ் மறை முழக்கம் - எங்கள்
நாயகன் நாவுக்குப் பழக்கம் - இது
நதி வாரிய புனலோ ! கடல்
மடை மீறிய செயலோ ! என
நாள்தோறும் தத்துவ விளக்கம் - வான
நாட்டவர் கேட்பது வழக்கம்
தொண்டர்க்குத் தொண்டனாய் இருப்பான் - இவன்
தோழர்க்குத் தன்னையே கொடுப்பான் - கற்றுத்
துறை போகிய புலவோருடன்
மறையோதிய பெரியோர் தொழ
சித்தர்க்குச் சித்தனாய் இருப்பான் - பெரும்
பித்தனைப் போலவும் சிரிப்பான்
சங்கர தேவனின் ஆட்டம் - அதில்
சக்தி குமாரர்க்கு நாட்டம் - இன்பச்
சதிராடுது மனமே ! உயிர்
ஜதி போடுது தினமே எனச்
சந்தத்தில் பேசுது கூட்டம் - இது
சந்திர சூரியர் தோட்டம்
Comments