Vandhu vidu ennaruge
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 1 min read
Vandhu vidu ennaruge krishna krishna - unai
thandhu vidu endhanukkae krishna krishna
sindhaiyellaam un mugame krishna krishna - enai
seendi vilaiyaadudhadaa krishna krishna
maegangalin oorvalaththil krishna krishna - undhan
maeni niram thonudhada krishna krishna
minnal minni maraigaiyilae krishna krishna
meen vizhigal chimittudhada krishna krishna
ullamellaam un ninaivae krishna krishna
oozhikkooththu aadudhada krishna krishna
kallam ini aagaadhadaa krishna krishna - en
kannmaniyae vandhidadaa krishna krishna
sammadhamo undhanukku krishna krishna - enai
sanjalaththil aazhthutharku krishna krishna
amma enrazhaiththidadaa krishna krishna - ennai
aara thazhuvidadaa krishna krishna
வந்து விடு என்னருகே க்ருஷ்ணா க்ருஷ்ணா - உன்னைத்
தந்து விடு எந்தனுக்கே க்ருஷ்ணா க்ருஷ்ணா
சிந்தையெல்லாம் உன் முகமே க்ருஷ்ணா க்ருஷ்ணா - எனைச்
சீடி விளையாடுதடா க்ருஷ்ணா க்ருஷ்ணா
மேகங்களின் ஊர்வலத்தில் க்ருஷ்ணா க்ருஷ்ணா - உந்தன்
மேனி நிறம் தோணுதடா க்ருஷ்ணா க்ருஷ்ணா
மின்னல் மின்னி மறைகையிலே க்ருஷ்ணா க்ருஷ்ணா
மீன் விழிகள் சிமிட்டுதடா க்ருஷ்ணா க்ருஷ்ணா
உள்ளமெல்லாம் உன் நினைவே க்ருஷ்ணா க்ருஷ்ணா
ஊழிக்கூத்து ஆடுதடா க்ருஷ்ணா க்ருஷ்ணா
கள்ளம் இனி ஆகாதடா க்ருஷ்ணா க்ருஷ்ணா - என்
கண்மணியே வந்திடடா க்ருஷ்ணா க்ருஷ்ணா
சம்மதமோ உந்தனுக்கு க்ருஷ்ணா க்ருஷ்ணா - எனைச்
சஞ்சலத்தில் ஆழ்த்துதற்கு க்ருஷ்ணா க்ருஷ்ணா
அம்மா என்றழைத்திடடா க்ருஷ்ணா க்ருஷ்ணா - என்னை
ஆரத்தழுவிடடா க்ருஷ்ணா க்ருஷ்ணா
Comments