top of page

Valiya vandhu sikkikkondaan

  • SamratchanaLyrics
  • Feb 17, 2019
  • 1 min read

Valiya vandhu sikkikkondaan iraivan nammidam

varaiyillaadha urudhi vaiththan saththiyaththidam - adhanaal


eliyorin nalam kaakka irangi vandhaan

yaedho avan vidhiyo nammul inaindhu kondaan


kaliyin kodiya paadhai maatri kaaththida vandhaan - andha

kadavul Sivashankaran porvai porththi vandhaan

malindha porulaaga thannai maatri kondaan - avan

manadhu miga punpattaalum thaetri kondaan


amaidhi soozhal thandhaan vaazha adhirshtam illai

anbil thannai karaiththu thandhaan arundhavillai

thaanae uravu enraan [namakku] yaerka thagudhi illai

thaalaa paasam vaiththaan adhanaal [thanakkum] nimmadhi illai


potrudhalil enrum avan magizhvadhum illai

thootruvaar kuralai sevi saayppadhum illai

kaatraay parandhu udhavuraan yaarum karudhuvadhillai

karunaikkaedhum panjam undo adhudhaan illai


வலிய வந்து சிக்கிக் கொண்டான் இறைவன் நம்மிடம்

வரையில்லாத உறுதி வைத்தான் சத்தியத்திடம் - அதனால்


எளியோரின் நலம் காக்க இறங்கி வந்தான்

ஏதோ அவன் விதியோ நம்முள் இணைந்து கொண்டான்


கலியின் கொடிய பாதை மாற்றி காத்திட வந்தான் - அந்த

கடவுள் சிவசங்கரன் போர்வை போர்த்தி வந்தான்

மலிந்த பொருளாக தன்னை மாற்றிக் கொண்டான் - அவன்

மனது மிக புண்பட்டாலும் தேற்றிக் கொண்டான்


அமைதி சூழல் தந்தான் வாழ அதிர்ஷ்டம் இல்லை

அன்பில் தன்னை கரைத்து தந்தான் அருந்தவில்லை

தானே உறவு என்றான் [நமக்கு] ஏற்க தகுதி இல்லை

தாளா பாசம் வைத்தான் அதனால் [தனக்கும்] நிம்மதி இல்லை


போற்றுதலில் என்றும் அவன் மகிழ்வதும் இல்லை

தூற்றுவார் குரலை செவி சாய்ப்பதும் இல்லை

காற்றய் பறந்து உதவுறான் யாரும் கருதுவதில்லை

கருணைக்கேதும் பஞ்சம் உண்டோ அதுதான் இல்லை

 
 
 

Recent Posts

See All
Vaa muruga padham

Audio: https://drive.google.com/file/d/1WfHp0C6oyv6Y14OvdXNr6uhwsA1RbA1V/view?usp=sharing Vaa muruga padham thaa muruga - vadi vael...

 
 
 
Vaadi Kannaara

வாடி கண்ணாரக் காணலாம் வையம் அளந்தவனை வணங்கி அமைதி பெறலாம் சிவசங்கரனை ஓடி ஓடி அலைந்து ஊருக்குழைப்பவனை தேடிப் பிடித்து அவன் காலைப்...

 
 
 
Vaanavarum Kaana Varum

வானவரும் காணவரும் சித்திரக் கூடம் ஸ்ரீ ராமனவன் பாதம் வைத்த ப்ரம்ம பீடம் - இதுவே ஞானியர்கள் தவமியற்றும் தபோவனம் நானிலத்தோர் கண்டு மகிழும்...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page