top of page

Vaiththa kangal

  • SamratchanaLyrics
  • Feb 17, 2019
  • 1 min read

Vaiththa kangal vaangavillai

vallalae un uzhagl

vandha manam thirumbavillai

vaamananae un padhaththil


moikkum vandum kirangi nirkum

mogana idhazhgalilum - arul

modhi thadhumbum vizhi

karunai malargalilum


paadhaththin azhagu innum

paarththu paarththu theeravillai

parandhaaman nadaiyazhago

paarvaikkul adangavillai

veesi varum kai azhagu

paesa oru vaarththai illai

vimmidha tholazhago

vilakka oru mozhiyum illai


mugam ennum thaamaraiyil

moikkum vizhi vandugalo

mogana idhazhgalukkul

muththukkal padhindhanavo

jegamellaam eerkkinra

punnagaidhaan shankaramo

sangeetha paechu ullam

kollai kollum mandhiramo


chiththamellaam sudhdhi seyyum

seedha kamalam nee - emai

seerthiruththi aatkollum

sengamalai naayagan nee

viththagam paesi emmai

velginra arignan nee

vaedhaththin porulaaga

vilanguginra maayavan nee


வைத்த கண்கள் வாங்கவில்லை வள்ளலே உன் அழகில்

வந்த மனம் திரும்பவில்லை வாமனனே உன் பதத்தில்


மொய்க்கும் வண்டும் கிறங்கி நிற்கும் மோகன இதழ்களிலும் - அருள்

மோதித் ததும்பும் விழி கருணை மலர்களிலும்


பாதத்தின் அழகு இன்னும் பார்த்து பார்த்து தீரவ்ல்லை

பரந்தாமன் நடைய்ழகோ பார்வைக்குள் அடங்கவில்லை

வீசி வரும் கையழகு பேச ஒரு வார்த்தை இல்லை

விம்மித தோளழகோ விளக்க ஒரு மொழியுமில்லை


முகம் என்னும் தாமரையில் மொய்க்கும் விழி வண்டுகளோ

மோகன இதழ்களுக்குள் முத்துக்கள் பதிந்தனவோ

ஜெகமெல்லாம் ஈர்க்கின்ற புன்னகைதான் சங்கரமோ

சங்கீதப் பேச்சு உள்ளம் கொள்ளை கொள்ளும் மந்திரமோ


சித்தமெல்லாம் சுத்தி செய்யும் சீதக்கமலம் நீ - எமை

சீர்திருத்தி ஆட்கொள்ளும் செங்கமலை நாயகன் நீ

வித்தகம் பேசி எம்மை வெல்கின்ற அறிஞன் நீ

வேதத்தின் உயிராக விளங்குகின்ற மாயவன் நீ


 
 
 

Recent Posts

See All
Vaa muruga padham

Audio: https://drive.google.com/file/d/1WfHp0C6oyv6Y14OvdXNr6uhwsA1RbA1V/view?usp=sharing Vaa muruga padham thaa muruga - vadi vael...

 
 
 
Vaadi Kannaara

வாடி கண்ணாரக் காணலாம் வையம் அளந்தவனை வணங்கி அமைதி பெறலாம் சிவசங்கரனை ஓடி ஓடி அலைந்து ஊருக்குழைப்பவனை தேடிப் பிடித்து அவன் காலைப்...

 
 
 
Vaanavarum Kaana Varum

வானவரும் காணவரும் சித்திரக் கூடம் ஸ்ரீ ராமனவன் பாதம் வைத்த ப்ரம்ம பீடம் - இதுவே ஞானியர்கள் தவமியற்றும் தபோவனம் நானிலத்தோர் கண்டு மகிழும்...

 
 
 

Comentários


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page