top of page

Vaendum vaendum

  • SamratchanaLyrics
  • Feb 17, 2019
  • 1 min read

Vaendum vaendum vaendum enakku

ninnarul vaendum - ennai

theendidum theeya ennangal inimael

maandida vaendum

manamennum kurangae alaiyaamal nee

adangida vaendum - andha

madhavan Shankaran naamam solli nee

mayangida vaendum


unnai azhaiththu urugi thudhiththu

dhinamum paadida vaendum - un

nilai kandu oru nilaiyaagi uyirae

urugida vaendum

enakkul jeevanaay neeyae kalandhu

ennai iyakkida vaendum

endhan piravi eduththadhan payanae anbae

unakkena iruththal vaendum


undhan azhagil ulagai marandhu

ennai izhandhida vaendum

kandhan uruvilae kaatchiyaliththu

kannukkul ninrida vaendum

niththamum unnaiyae ninaindhu ninaindhu

nenjam negizhndhida vaendum - indha

piththanin piravi kadaiththaetridavae

Shankaran arulida vaendum



வேண்டும் வேண்டும் வேண்டும் எனக்கு நின்னருள் வேண்டும் - என்னை

தீண்டிடும் தீய எண்ணங்கள் இனிமேல் மாண்டிட வேண்டும்

மனமென்னும் குரங்கே அலையாமல் நீ அடங்கிட வேண்டும் - அந்த

மாதவன் சங்கரன் நாமம் சொல்லி நீ மயங்கிட வேண்டும்


உன்னை அழைத்து உருகி துதித்து தினமும் பாடிட வேண்டும் - உன்

நிலைகண்டு ஒரு நிலையாகி உயிரே உருகிட வேண்டும்

எனக்குள் ஜீவனாய் நீயே கலந்து என்னை இயக்கிட வேண்டும்

எந்தன் பிறவி எடுத்ததன் பயனே அன்பே உனக்கென இருத்தல் வேண்டும்


உந்தன் அழகில் உலகை மறந்து என்னை இழந்திட வேண்டும்

கந்தன் உருவிலே காட்சியளித்து கண்ணுக்குள் நின்றிட வேண்டும்

நித்தமும் உன்னையே நினைந்து நினைந்து நெஞ்சம் நெகிழ்ந்திட வேண்டும் - இந்த

பித்தனின் பிறவி கடைத்தேற்றிடவே சங்கரன் அருளிட வேண்டும்


 
 
 

Recent Posts

See All
Vaa muruga padham

Audio: https://drive.google.com/file/d/1WfHp0C6oyv6Y14OvdXNr6uhwsA1RbA1V/view?usp=sharing Vaa muruga padham thaa muruga - vadi vael...

 
 
 
Vaadi Kannaara

வாடி கண்ணாரக் காணலாம் வையம் அளந்தவனை வணங்கி அமைதி பெறலாம் சிவசங்கரனை ஓடி ஓடி அலைந்து ஊருக்குழைப்பவனை தேடிப் பிடித்து அவன் காலைப்...

 
 
 
Vaanavarum Kaana Varum

வானவரும் காணவரும் சித்திரக் கூடம் ஸ்ரீ ராமனவன் பாதம் வைத்த ப்ரம்ம பீடம் - இதுவே ஞானியர்கள் தவமியற்றும் தபோவனம் நானிலத்தோர் கண்டு மகிழும்...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page