top of page

Vaelaada mayilaada

  • SamratchanaLyrics
  • Feb 17, 2019
  • 1 min read

Vaelaada mayilaada vilaiyaadi varuvaan

saelaadum vizhiyaalae arulalli tharuvaan

umaiyaada sivamaada ulagam suzhanraada

kannimaiyaa dhaevargalum iyaindhu udan aada


thirumaalum dhaeviyodu dheem dheem ena aada

kalaivaani brammanodu kaatchi thandhaada

ganapadhiyum kaanthamalai joodhiyum aada

gal gal enum silambu oasaiyudan kooda


kadal alaigal ezhundhaada kadhirmadhiyum aada

mannodu vinnaada malaigalellaam aada

thenralilae malaraada thaen undu vandaada

theenthamizhil kavipaadi maandhar thamai marandhaada


karuvinilae siru madhalai kaal udhaiththaada

kazhaniyilae nerkadhirgal kanaththasaindhaada

kaavadigal kudhiththaada karagangalaada

saevadiyil padham thandhu Sivashankar aada

shankara..... Siva shankara.......


வேலாட மயிலாட விளையாடி வருவான்

சேலாடும் விழியாலே அருளள்ளி தருவான்

உமையாட சிவமாட உலகம் சுழன்றாட

கண்ணிமையா தேவர்களும் இயைந்து உடன் ஆட


திருமாலும் தேவியொடு தீம் தீம் என ஆட

கலைவாணி ப்ரம்மனொடு காட்சி தந்தாட

கணபதியும் காந்தமலைஜோதியும் ஆட

கல்கல் எனும் சிலம்பு ஓசையுடன் கூட


கடல் அலைகள் எழுந்தாட கதிர்மதியும் ஆட

மண்ணோடு விண்ணாட மலைகளெல்லாம் ஆட

தென்றலிலே மலராட தேன் உண்டு வண்டாட

தீந்தமிழில் கவிபாடி மாந்தர் தமை மறந்தாட


கருவினிலே சிறு மதலை கால் உதைத்தாட

கழனியிலே நெற்கதிர்கள் கனத்தசைந்தாட

காவடிகள் குதித்தாட கரகங்களாட

சேவடியில் பதம் தந்து சிவசங்கர் ஆட

சங்கரா.. சிவசங்கரா..

 
 
 

Recent Posts

See All
Vaa muruga padham

Audio: https://drive.google.com/file/d/1WfHp0C6oyv6Y14OvdXNr6uhwsA1RbA1V/view?usp=sharing Vaa muruga padham thaa muruga - vadi vael...

 
 
 
Vaadi Kannaara

வாடி கண்ணாரக் காணலாம் வையம் அளந்தவனை வணங்கி அமைதி பெறலாம் சிவசங்கரனை ஓடி ஓடி அலைந்து ஊருக்குழைப்பவனை தேடிப் பிடித்து அவன் காலைப்...

 
 
 
Vaanavarum Kaana Varum

வானவரும் காணவரும் சித்திரக் கூடம் ஸ்ரீ ராமனவன் பாதம் வைத்த ப்ரம்ம பீடம் - இதுவே ஞானியர்கள் தவமியற்றும் தபோவனம் நானிலத்தோர் கண்டு மகிழும்...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page