top of page

Vaedha porulae

  • SamratchanaLyrics
  • Feb 17, 2019
  • 1 min read

Vaedha porulae vilaiyaadudhiyo

vediththa thoonil kodhiththezhundhanaiyo

naadham adhira nadamaadinayo

narasimma dheivamaay vadiveduththanaiyo


bakthanai kaakka parithaviththanaiyo

baadhagan iranyan kudal vagirndhanaiyo

mukthi avarkkum nee thandhanaiyo

mummalam kalaindhu padham saerththanaiyo


kodhikkum analaay kobam kondanaiyo

kuzhandhai theenda kuliraaginaiyo

thaviththa prahlaadhan thuyar theerththanaiyo

thanjam thandhu aatkondanaiyo


ulagai undu nee kaaththanaiyo

ulagai umizhndhu ulava vittanaiyo

ulagam alandha vaamanan neeyo

uvandhu thoodhaay nee nadandhanaiyo


anbe uruvaay puvi vandhanaiyo

arulai pozhiyum maamazhai neeyo

nanbanaay yugam yugamaaga vandhanaiyo

nambiya paerukku naaranan neeyo


koovi azhaithaal kural koduppaayo

koodi vaazha vandhu vittanaiyo

aaviyinullae aathma neeyo

sri harikrishna Sivashankar aanaayo


வேதப் பொருளே விளையாடுதியோ

வெடித்த தூணில் கொதித்தெழுந்தனையோ

நாதம் அதிர நடமாடினயோ

நரசிம்ம தெய்வமாய் வடிவெடுத்தனையோ


பக்தனைக் காக்க பரிதவித்தனையோ

பாதகன் இரண்யன் குடல் வகிர்ந்தனையோ

முக்தி அவர்க்கும் நீ தந்தனையோ

மும்மலம் களைந்து பதம் சேர்த்தனையோ


கொதிக்கும் அனலாய் கோபம் கொண்டனையோ

குழந்தை தீண்ட குளிராகினையோ

தவித்த ப்ரஹலாதன் துயர் தீர்த்தனையோ

தஞ்சம் தந்து ஆட்கொண்டனையோ


உலகை உண்டு நீ காத்தனையோ

உலகை உமிழ்ந்து உலவ விட்டனையோ

உலகம் அளந்த வாமனன் நீயோ

உவந்து தூதாய் நீ நடந்தனையோ


அன்பே உருவாய் புவி வந்தனையோ

அருளை பொழியும் மாமழை நீயோ

நண்பனாய் யுகம் யுகமாக வந்தனையோ

நம்பிய பேருக்கு நாரணன் நீயோ


கூவி அழைத்தால் குரல் கொடுப்பாயோ

கூடி வாழ வந்து விட்டனையோ

ஆவியினுள்ளே ஆத்மா நீயோ

ஸ்ரீ ஹரிக்ருஷ்ணா சிவசங்கர் ஆனாயோ

 
 
 

Recent Posts

See All
Vaa muruga padham

Audio: https://drive.google.com/file/d/1WfHp0C6oyv6Y14OvdXNr6uhwsA1RbA1V/view?usp=sharing Vaa muruga padham thaa muruga - vadi vael...

 
 
 
Vaadi Kannaara

வாடி கண்ணாரக் காணலாம் வையம் அளந்தவனை வணங்கி அமைதி பெறலாம் சிவசங்கரனை ஓடி ஓடி அலைந்து ஊருக்குழைப்பவனை தேடிப் பிடித்து அவன் காலைப்...

 
 
 
Vaanavarum Kaana Varum

வானவரும் காணவரும் சித்திரக் கூடம் ஸ்ரீ ராமனவன் பாதம் வைத்த ப்ரம்ம பீடம் - இதுவே ஞானியர்கள் தவமியற்றும் தபோவனம் நானிலத்தோர் கண்டு மகிழும்...

 
 
 

Hozzászólások


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page