Vaazhkkaiyum oar
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 1 min read
Vaazhkkaiyum oar kavidhai - ena
varaindhaliththa Shankara - verum
vaarththai kavidhaigalil - unai
varaiya iyanridumo
thookkiya kaal kavidhai - adhu
thulakkiya porul kavidhai - ulagai
aakkiyadhor kavidhai - thandha
aanandha perunkavidhai
vaakkugal pala kavidhai - tharum
varangalo arunkavidhai
vaazhththukkalum kavidhai - adhai
vazhangum vidham kavidhai
nokkilae oar kavidhai - adhan
nunukkamum pala kavidhai - emai
kaakkum arul kavidhai - andha
karunaiyae perunkavidhai
gnaanam tharum kavidhai - adhan
nayampadu urai kavidhai
gnaalam pugazh kavidhai - indha
gnaayitrin oli kavidhai - nee
paattuviththa kavidhai - unai
bakthi seyyum kavidhai - enai
aattuviththa kavidhai - un
anbenum uyar kavidhai
pulli mayil enavae - nenjil
thulli varum kavidhai
paeraruvi enavae perugi
purandu varum kavidhai
thellu thamizh kavidhai - ullam
alli magizh kavidhai - naan
thaedi ninra kavidhai - indha
dheiva thiru kavidhai
வாழ்க்கையும் ஓர் கவிதை - என
வரைந்தளித்த சங்கரா - வெறும்
வார்த்தைக் கவிதைகளில் - உனை
வரைய இயன்றிடுமோ
தூக்கிய கால் கவிதை - அது
துலக்கிய பொருள் கவிதை - உலகை
ஆக்கியதோர் கவிதை - தந்த
ஆனந்தம் பெருங்கவிதை
வாக்குகள் பல கவிதை - தரும்
வரங்களோ அருங்கவிதை
வாழ்த்துக்களும் கவிதை - அதை
வழங்கும் விதம் கவிதை
நோக்கிலே ஓர் கவிதை - அதன்
நுணுக்கமும் பல கவிதை - எமைக்
காக்கும் அருட் கவிதை - அந்த
கருணையே பெருங்கவிதை
ஞானம் தரும் கவிதை - அதன்
நயம்படு உரை கவிதை
ஞாலம் புகழ் கவிதை - இந்த
ஞாயிற்றின் ஒளிக் கவிதை - நீ
பாட்டுவித்த கவிதை - உனை
பக்தி செய்யும் கவிதை - எனை
ஆட்டுவித்த கவிதை - உன்
அன்பெனும் உயர் கவிதை
புள்ளி மயில் எனவே - நெஞ்சில்
துள்ளி வரும் கவிதை
பேரருவியெனவே பெருகிப்
புரண்டு வரும் கவிதை
தெள்ளு தமிழ்க் கவிதை - உள்ளம்
அள்ளி மகிழ் கவிதை - நான்
தேடி நின்ற கவிதை - இந்தத்
தெய்வத் திருக் கவிதை
Comments