Vaazha vaa kaelai
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 1 min read
Vaazha vaa kaelai nagarkkae
eththanai koyil senraay eththanai thaengaay udaiththaay
eththanai dheivam kandaay eththanai eththanai thudhigal seidhaay
aththanai dheivam ellaam piththanaay sumandhu aadum
viththagan vijayam kaana viraindhu vaa kelai nagarkkae
kannan ennai kandu kondaan kaiyirandil alli kondaan
unnaiyum thaan thaedi vandhaan oadi oadi oliginraayae
vanna malar baba vaiyam vaazhvikka vandhudhitthan
thinnamaay nambi neeyum thigazha vaa kaelai nagarkkae
eththanai poigal sonnaay eththanai eththanai poyyaay vaazhndhaay
eththanai eththanai enru yaengi yaengi thavikkinraayae
aththanaiyum arul neruppil azhindhu pom arivaayaa
viththagan sivanai kaanbaay viraindhu vaa kaelai nagarkkae
eththanai thavangal seidhum eidhida nilaigal ellaam
moththamaay namakkku thandhu mona thavamiyatrum
arpudha kadavul baba porpadham kaana petraal
nichchayam karmam illai nimirndhu vaa kaelai nagarkkae
Sivashankar baba enraal dhaevarum maginzhdhu nirpaar
Sivashankar baba enraal sirappellam sirakkkum engum
Sivashankar baba enraal pirappillai mukthi kittum
Sivashankar baba kandu sirakka vaa kaelai nagarkkae
வாழ வா கேளை நகர்க்கே
எத்தனை கோயில் சென்றாய் எத்தனை தேங்காய் உடைத்தாய்
எத்தனை தெய்வம் கண்டாய் எத்தனை எத்தனை துதிகள் செய்தாய்
அத்தனை தெய்வம் எல்லாம் பித்தனாய் சுமந்து ஆடும்
வித்தகன் விஜயம் காண விரைந்து வா கேளை நகர்க்கே
கண்ணன் என்னை கண்டு கொண்டான் கையிரண்டில் அள்ளிக் கொண்டான்
உன்னையும்தான் தேடி வந்தான் ஓடி ஓடி ஒளிகின்றாயே
வண்ணமலர் பாபா வையம் வாழ்விக்க வந்துதித்தான்
திண்ணமாய் நம்பி நீயும் திகழ வா கேளை நகர்க்கே
எத்தனை பொய்கள் சொன்னாய் எத்தனை எத்தனை பொய்யாய் வாழ்ந்தாய்
எத்தனை எத்தனை என்று ஏங்கி ஏங்கி தவிக்கின்றாயே
அத்தனையும் அருள் நெருப்பில் அழிந்து போம் அறிவாயா
வித்தகன் சிவனைக் காண்பாய் விரைந்து வா கேளை நகர்க்கே
எத்தனை தவங்கள் செய்தும் எய்திடா நிலைகள் எல்லாம்
மொத்தமாய் நமக்கு தந்து மோனத் தவமியற்றும்
அற்புத கடவுள் பாபா பொற்பதம் காணப் பெற்றால்
நிச்சயம் கர்மம் இல்லை நிமிர்ந்து வா கேளை நகர்க்கே
சிவசங்கர் பாபா என்றால் தேவரும் மகிழ்ந்து நிற்பார்
சிவசங்கர் பாபா என்றால் சிறப்பெல்லாம் சிறக்கும் எங்கும்
சிவசங்கர் பாபா என்றால் பிறப்பில்லை முக்தி கிட்டும்
சிவசங்கர் பாபா கண்டு சிறக்க வா கேளை நகர்க்கே
Comments