Vaanavil thoranam katti
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 1 min read
Vaanavil thoranam katti azhaiththom
varuvaay Shankaranae - nee
varuvaay enraal adhudhaan engal
varuvaay Shankaranae
aasigal vaendi unnai azhaikkkum
avasiyam emakkillai - andha
aasaiyum emakkillai - un
asaivugal ellam varangkal enraal
aasigal thaevaiyillai - adharku
avasiyam naeravillai
thanai ariyaamalae varangal arulum
thanmai un udaimai - andha
thagaimai un perumai
unai kaetkaamalae varangal peruvadhu
engal thani thiramai - un
anbargal pirappurimai
thikkugal ellaam thikvijayam sei
vetri kodi kattu - nee
vetri kodi kattu - nee
kattiya kodiyil engal peyarae
kaanudhu sudar vittu - adhu
kadavulin kal vettu
aayiram baba varuvaar povaar
needhaan alibaba - em
Sivashankara baba - un
arulai kollai adikkkum thirudargal
azhaiththom vaa vaa vaa - em
Sivashankara dhevaa
வானவில் தோரணம் கட்டி அழைத்தோம்
வருவாய் சங்கரனே - நீ
வருவாய் என்றால் அதுதான் எங்கள்
வருவாய் சங்கரனே
ஆசிகள் வேண்டி உன்னை அழைக்கும்
அவசியம் எமக்கில்லை - அந்த
ஆசையும் எமக்கில்லை - உன்
அசைவுகள் எல்லாம் வரங்கள் என்றால்
ஆசிகள் தேவையில்லை - அதற்கு
அவசியம் நேரவில்லை
தனை அறியாமலே வரங்கள் அருளும்
தன்மை உன் உடைமை - அந்த
தகைமை உன் பெருமை
உனை கேட்காமலே வரங்கள் பெறுவது
எங்கள் தனித் திறமை - உன்
அன்பர்கள் பிறப்புரிமை
திக்குகள் எல்லாம் திக் விஜயம் செய்
வெற்றிக் கொடி கட்டு - நீ
வெற்றிக் கொடி கட்டு - நீ
கட்டிய கொடியில் எங்கள் பெயரே
காணுது சுடர் விட்டு - அது
கடவுளின் கல் வெட்டு
ஆயிரம் பாபா வருவார் போவார்
நீதான் அலிபாபா - எம்
சிவசங்கர பாபா - உன்
அருளைக் கொள்ளை அடிக்கும் திருடர்கள்
அழைத்தோம் வா வா வா - எம்
சிவசங்கர தேவா
Comments