Unnai enakkul nirai
- SamratchanaLyrics
- Feb 17, 2019
- 1 min read
Unnai enakkul nirai - illai
ennai unakkul karai
kondaay manidhanennum thirai - Shankara
guruvalla nee paerirai - sundhara
ennaththil gnaanam vidhai
yaekaanthaththil ennai pudhai - un
vannaththil ennai nanai - en
vaazhvil un padhamae thunai
thandhaay anbennum marai
thagarththaay nee maaya thirai
peidhaay nee karunai mazhai
poruththaay nee engal kurai
ulagai padaiththa sivam - unnodu
vaazhudhal engal thavam
nee thaedaamal vandha dhanam - unnaal
kadaithaerum kodi janam - Shankara
உன்னை எனக்குள் நிறை - இல்லை
என்னை உனக்குள் கரை
கொண்டாய் மனிதனென்னும் திரை - சங்கரா
குருவல்ல நீ பேரிறை - சுந்தரா
எண்ணத்தில் ஞானம் விதை
ஏகாந்தத்தில் என்னை புதை - உன்
வண்ணத்தில் என்னை நனை - என்
வாழ்வில் உன் பதமே துணை
தந்தாய் அன்பென்னும் மறை
தகர்த்தாய் நீ மாயத்திரை
பெய்தாய் நீ கருணை மழை
பொருத்தாய் நீ எங்கள் குறை
உலகைப் படைத்த சிவம் - உன்னோடு
வாழுதல் எங்கள் தவம்
நீ தேடாமல் வந்த தனம் - உன்னால்
கடைத்தேறும் கோடி ஜனம் - சங்கரா
Comments