Ulagamellaam un kudai
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Ulagamellaam un kudai keezh oadi varugudhu - un oankaara thiruppugazhai paadi magizhudhu
kalagamellaam thalai therikka oadi maraiyudhu - inge
galagalappum aanandhamum kavidhai pozhiyudhu - adhanaal
samratchana vandhavarkku sangkatamillai - vaazhvil
jaathi madha baedhamennum modhalgal illai
kamsanukkum motcham thandha karunai ullamae - un
kann vazhiyae paayudhaiyaa premai vellamae
Shankaranai sharanadaindhaal mangalamundu - indha
sannidhiyin alaivarisai enganumundu
thangu thadai yaedhuminri bojanamundu - nalla
thaay madiyil thavazhuginra nimmadhi undu - adhanaal
pallaviyum thalai vanangi charanam paadudhu - un
paarvai pattu noigal kooda parandhu oadudhu
ellaiyatra nin perumai innum sollavo - nee
illaiyennum sollai kooda iyakkubavan allavo
உலகமெல்லாம் உன் குடைக்கீழ் ஓடி வருகுது - உன்
ஓங்கார திருப்புகழை பாடி மகிழுது
கலகமெல்லாம் தலை தெறிக்க ஓடி மறையுது - இங்கே
கலகலப்பும் ஆனந்தமும் கவிதை பொழியுது - அதனால்
சம்ரட்சணா வந்தவர்க்கு சங்கடமில்லை - வாழ்வில்
ஜாதி மத பேதமென்னும் மோதல்களில்லை
கம்சனுக்கும் மோட்சம் தந்த கருணையுள்ளமே - உன்
கண்வழியே பாயுதைய்யா ப்ரேமை வெள்ளமே
சங்கரனை சரணடைந்தால் மங்கலமுண்டு - இந்த
சந்நிதியின் அலைவரிசை எங்கணுமுண்டு
தங்கு தடை ஏதுமின்றி போஜனமுண்டு - நல்ல
தாய் மடியில் தவழுகின்ற நிம்மதியுண்டு - அதனால்
பல்லவியும் தலை வணங்கி சரணம் பாடுது - உன்
பார்வை பட்டு நோய்கள் கூட பறந்து ஓடுது
எல்லையற்ற நின் பெருமை இன்னும் சொல்லவோ - நீ
இல்லையென்னும் சொல்லைக்கூட இயக்குபவன் அல்லவோ
Comments