top of page

Ulagaththin kadhavugalai

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Ulagaththin kadhavugalai thatti vandhavan

ullaththin kangalellaam thirandhu vittavan

kalagaththai kai nodikkul adakki vidubavan

kaalaththai ninaippaalae maatra vallavan


ezhupiravi vinai theerkkum marundhaanavan

enni urugum anbarukku virundhaanavan

azhuginra kann thudaikkum annaiyaanavan

aadharsa guruvaaga vandhavan ivan


dharmamenum payir valara tharuna mazhai ivan

thaavi oadum manam adakkum thalapadhi ivan

karmaththai vaerodu kalaindhu vidubavan

kaarana kaariyamaay ulagil vandhavan


otti uravaada vandha unmai sodharan

oalam kaettu viraindhu vandha karunaa saagaran

patti thotti engum pugazh padaiththa kaavalan

paavalarkku rusiyaana paadum porulivan


kaliyugaththu kodumaigalil kaakka vandhavan

karam thottu maru agatrum kadavulaanavan

malivaaga thanai thandha maayavan ivan

kannmani Sivashankar thani thanmai vaaynthavan


otrumaiyai pakkuvamaay ootta vandhavan

uyarvu tharum paadhai kaattum oli vilakkivan

patru vitta manaththai viraindhu patri kolbavan

bandham thurandhu namakkae sondhamaanavan


உலகத்தின் கதவுகளை தட்டி வந்தவன்

உள்ளத்தின் கண்களெல்லாம் திறந்து விட்டவன்

கலகத்தை கை நொடிக்குள் அடக்கி விடுபவன்

காலத்தை நினைப்பாலே மாற்ற வல்லவன்


எழுபிறவி வினை தீர்க்கும் மருந்தானவன்

எண்ணி உருகும் அன்பருக்கு விருந்தானவன்

அழுகின்ற கண் துடைக்கும் அன்னையானவன்

ஆதர்ச குருவாக வந்தவன் இவன்


தர்மமெனும் பயிர் வளர தருணமழை இவன்

தாவி ஓடும் மனம் அடக்கும் தளபதி இவன்

கர்மத்தை வேரோடு களைந்து விடுபவன்

காரண காரியமாய் உலகில் வந்தவன்


ஒட்டி உறவாட வந்த உண்மை சோதரன்

ஓலம் கேட்டு விரைந்து வந்த கருணாசாகரன்

பட்டி தொட்டி எங்கும் புகழ் படைத்த காவலன்

பாவலர்க்கு ருசியான பாடும் பொருளிவன்


கலியுகத்து கொடுமைகளில் காக்க வந்தவன்

கரம் தொட்டு மறு அகற்றும் கடவுளானவன்

மலிவாக தனைத் தந்த மாயவன் இவன்

கண்மணி சிவசங்கர் தனித்தன்மை வாய்ந்தவன்


ஒற்றுமையை பக்குவமாய் ஊட்ட வந்தவன்

உயர்வு தரும் பாதை காட்டும் ஒளி விளக்கிவன்

பற்று விட்ட மனத்தை விரைந்து பற்றி கொள்பவன்

பந்தம் துறந்து நமக்கே சொந்தமானவன்

 
 
 

Recent Posts

See All
Udale un kshetram

Audio: https://drive.google.com/file/d/13Yp3s4avBqBgkZbYB6stdGuQO2QxC4Hz/view?usp=sharing Udale un kshetram ulame thirukkoyil kangal...

 
 
 
Ulaga mahaa thirudan

Audio: https://drive.google.com/file/d/1q71nmmP1HuuIh0T_CtvZozPg0R5vCbXP/view?usp=sharing Ulaga mahaa thirudan nam ullam kavarndha...

 
 
 
Ulagamellaam un kudai

Ulagamellaam un kudai keezh oadi varugudhu - un oankaara thiruppugazhai paadi magizhudhu kalagamellaam thalai therikka oadi maraiyudhu -...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page