top of page

Unai paada paada

  • SamratchanaLyrics
  • Feb 17, 2019
  • 2 min read

Updated: Oct 28, 2020

Audio:


Unai paada paada vaai manakkum Un pugazh ketkum sevi inikkum Un dhisai thedi karam kuviyum Un koyil naadi en kaal viraiyum Karuththiley un mugam thanai padhikkum Ganaththa en kanngal padham nanaikkum Uraththa kural undhan peyarazhaikkum - naan Unarum dheiveegam mei silirkkum Azhaikkum karam ennai aravanaikkum Alikkum varam endhan manam kalikkum Vidhaiththa vinaigalellaam kazhandrodum - unnai Ninaiththa kanam undhan arul kidaikkum Kuniththa puruvam endhan kurai vinavum - anbil Kuliththa en aanmaa than nilai ariyum Iniththa padham endhan idhayam nirkkum - ennul Rusiththa Sivashankaram enai anaikkum

உனைப் பாட பாட வாய் மணக்கும் உன் புகழ் கேட்கும் செவி இனிக்கும் உன் திசை தேடி கரம் குவியும் உன் கோயில் நாடி என் கால் விரையும் கருத்திலே உன் முகம் தனைப் பதிக்கும் கனத்த என் கண்கள் பதம் நனைக்கும் உரத்த குரல் உந்தன் பெயரழைக்கும் - நான் உணரும் தெய்வீகம் மெய்சிலிர்க்கும் அழைக்கும் கரம் என்னை அரவணைக்கும் அளிக்கும் வரம் எந்தன் மனம் களிக்கும் விதைத்த வினைகளெல்லாம் கழன்றோடும் - உன்னை நினைத்த கணம் உந்தன் அருள் கிடைக்கும் குனித்த புருவம் எந்தன் குறை வினவும் - அன்பில் குளித்த என் ஆன்மா தன் நிலை அறியும் இனித்த பதம் எந்தன் இதயம் நிற்கும் - என்னுள் ருசித்த சிவசங்கரம் எனை அணைக்கும் Meaning: உனைப் பாட பாட வாய் மணக்கும் (Unai paada paada vaai manakkum) As I sing about You, mouth becomes fragrant உன் புகழ் கேட்கும் செவி இனிக்கும் (Un pugazh ketkum sevi inikkum) The ears that hear Your glory becomes sweet உன் திசை தேடி கரம் குவியும் (Un dhisai thedi karam kuviyum) Hands worship in Your direction உன் கோயில் நாடி என் கால் விரையும் (Un koyil naadi en kaal viraiyum) My feet rush towards Your temple கருத்திலே உன் முகம் தனைப் பதிக்கும் (Karuththiley un mugam thanai padhikkum) My Mind fixed on Your face கனத்த என் கண்கள் பதம் நனைக்கும் (Ganaththa en kanngal padham nanaikkum) My tear filled eyes will dampen Your feet உரத்த குரல் உந்தன் பெயரழைக்கும் - நான் (Uraththa kural undhan peyarazhaikkum - naan) My loud voice will call Your Name உணரும் தெய்வீகம் மெய்சிலிர்க்கும் (Unarum dheiveegam mei silirkkum) The divinity that I feel will make me ecstatic அழைக்கும் கரம் என்னை அரவணைக்கும் (Azhaikkum karam ennai aravanaikkum) Calling Hands will embrace me அளிக்கும் வரம் எந்தன் மனம் களிக்கும் (Alikkum varam endhan manam kalikkum) The boon given will gladden my heart விதைத்த வினைகளெல்லாம் கழன்றோடும் - உன்னை (Vidhaiththa vinaigalellaam kazhandrodum - unnai) Previously sown sins will escape நினைத்த கணம் உந்தன் அருள் கிடைக்கும் (Ninaiththa kanam undhan arul kidaikkum) When I think of You, Your Grace will be received instantly குனித்த புருவம் எந்தன் குறை வினவும் - அன்பில் (Kuniththa puruvam endhan kurai vinavum - anbil) Your Knitted brow will inquire about my troubles குளித்த என் ஆன்மா தன் நிலை அறியும் (Kuliththa en aanmaa than nilai ariyum) My Love drenched soul will realise it’s state இனித்த பதம் எந்தன் இதயம் நிற்கும் - என்னுள் (Iniththa padham endhan idhayam nirkkum - ennul) Your sweet feet will be fixed in my heart ருசித்த சிவசங்கரம் எனை அணைக்கும் (Rusiththa Sivashankaram enai anaikkum) The Sivashankaram that I tasted within me,will embrace me. Summary: This song describes the greatness of Sri Shiva Shankar BABA.

 
 
 

Recent Posts

See All
Udale un kshetram

Audio: https://drive.google.com/file/d/13Yp3s4avBqBgkZbYB6stdGuQO2QxC4Hz/view?usp=sharing Udale un kshetram ulame thirukkoyil kangal...

 
 
 
Ulaga mahaa thirudan

Audio: https://drive.google.com/file/d/1q71nmmP1HuuIh0T_CtvZozPg0R5vCbXP/view?usp=sharing Ulaga mahaa thirudan nam ullam kavarndha...

 
 
 
Ulagamellaam un kudai

Ulagamellaam un kudai keezh oadi varugudhu - un oankaara thiruppugazhai paadi magizhudhu kalagamellaam thalai therikka oadi maraiyudhu -...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page