Ullaththil unai aarththi
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Ullaththil unai aarththi onbadhu poottum ittaen
oadivida mudindhidumo un jaalam ennidamo
pallaththil neer iranga paadhai yaedhum thaevaiyundo
kalla vinaayaganae kannmoodi nee urangu
vaanaththu minminiyai valai veesi pidiththu thaaraen
gnaana karumaniyae naayaganae neeyurangu
konaththul veetrirukkum kodhaiyavaL azhaiththaalum
kotravanae poogaadhae en madiyil neeyurangu
yaezhumalai nandhavanam etti pariththu thaaraen
ennai vittu pogaadhae yaekkam kolla vaikkaadhae
aazhiyilae urangubavan aasai pala kaattiduvaan
aiyanae mayangaadhae indha abalaiyudan neeyurangu
chandhira sooriyarai chakkaraththil katti thaaraen - Siva Shankara dheivamae nee ennai vittu pogaadhae
indhira logamenru thandhiramaay azhaiththaalum
en kannae pogaadahae en madiyil neeyurangu
உள்ளத்தில் உனை அமர்த்தி ஒன்பது பூட்டும் இட்டேன்
ஓடிவிட முடிந்திடுமோ உன் ஜாலம் என்னிடமோ
பள்ளத்தில் நீர் இறங்கப் பாதையேதும் தேவையுண்டோ
கள்ள வைனாயகனே கண்மூடி நீ உறங்கு
வானத்து மின்மினியை வலை வீசிப் பிடித்து தாரேன்
ஞானக் கருமணியே நாயகனே நீயுறங்கு
கோணத்துள் வீற்றிருக்கும் கோதையவள் அழைத்தாலும்
கொற்றவனே போகாதே என் மடியில் நீயுறங்கு
ஏழுமலை நந்தவனம் எட்டி பறித்துத் தாரேன்
என்னை விட்டுப் போகாதே ஏக்கம் கொள்ள வைக்காதே
ஆழியிலே உறங்குபவன் ஆசை பல காட்டிடுவான்
ஐயனே மயங்காதே இந்த அபலையுடன் நீயுறங்கு
சந்திர சூரியரை சக்கரத்தில் கட்டித் தாரேன் - சிவ
சங்கர தெய்வமே நீ என்னை விட்டுப் போகாதே
இந்திர லோகமென்று தந்திரமாய் அழைத்தாலும்
என் கண்ணே போகாதே என் மடியில் நீயுறங்கு
Comments