top of page

Ullaththai unnil vaiththu

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

Ullaththai unnil vaiththu udarkoottai veliye vittu

kallathanamum enna Sivashankara - neeyum

kai kotti nagaippadhenna Sivashankara

pallaththil ennai thalli paaraamal oaram katti

parithavikka vittadhenna Sivashankara - neeyum

parikaasam seivadhenna Sivashankara


kadalukkul moochchu thinari kadhari naan azhaikkaiyilae

kai thara koodaadho en Sivashankara - undhan

gavanaththai engae vaiththaay Sivashankara

neruppin naduvilittu naeraay eriya vittu

ninru vaedikkai enna Sivashankara - idhu

enrum vaadikkai thaano Sivashankara


maaya valaiyil chikki meela thudikkum ennai

kaaraadhiruppadhenna Sivashankara - mugam

paaraadhadhum nyayamo Sivashankara

puyal kaatril panjai polae purandu naan varugaiyilae

kazhal thandhu kaaththida vaenum Sivashankara - undhan

kann paarththu gathi thara vaenum Sivashankara


உள்ளத்தை உன்னில் வைத்து உடற்கூட்டை வெளியே விட்டு

கள்ளத்தனமும் என்ன சிவசங்கரா - நீயும்

கை கொட்டி நகைப்பதென்ன சிவசங்கரா

பள்ளத்தில் என்னை தள்ளிப் பாராமல் ஓரம் கட்டி

பரிதவிக்க விட்டதென்ன சிவசங்கரா - நீயும்

பரிகாசம் செய்வதென்ன சிவசங்கரா


கடலுக்குள் மூச்சுத் திணறிக் கதறி நான் அழைக்கையிலே

கைதரக் கூடாதோ என் சிவசங்கரா - உந்தன்

கவனத்தை எங்கே வைத்தாய் சிவசங்கரா

நெருப்பின் நடுவிலிட்டு நேராயெரிய விட்டு

நின்று வேடிக்கை என்ன சிவசங்கரா - இது

என்றும் வாடிக்கை தானோ சிவசங்கரா


மாயவலையில் சிக்கி மீளத்துடிக்கும் என்னை

காராதிருப்பதென்ன சிவசங்கரா - முகம்

பாராததும் நியாயமோ சிவசங்கரா

புயற்காற்றில் பஞ்சைப் போலே புரண்டு நான் வருகையிலே

கழல் தந்துக் காத்திட வேணும் சிவசங்கரா - உந்தன்

கண் பார்த்துக் கதி தர வேணும் சிவசங்கரா

 
 
 

Recent Posts

See All
Udale un kshetram

Audio: https://drive.google.com/file/d/13Yp3s4avBqBgkZbYB6stdGuQO2QxC4Hz/view?usp=sharing Udale un kshetram ulame thirukkoyil kangal...

 
 
 
Ulaga mahaa thirudan

Audio: https://drive.google.com/file/d/1q71nmmP1HuuIh0T_CtvZozPg0R5vCbXP/view?usp=sharing Ulaga mahaa thirudan nam ullam kavarndha...

 
 
 
Ulagamellaam un kudai

Ulagamellaam un kudai keezh oadi varugudhu - un oankaara thiruppugazhai paadi magizhudhu kalagamellaam thalai therikka oadi maraiyudhu -...

 
 
 

Comentários


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page