Pyjama kurtha pottu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Pyjama kurtha pottu bagavaanai paarththiyaa - ivan
paarvai sollum arththam ellaam pala kodi kettiyaa
naisaaga valaiyai nammil veesugiraan paarththiyaa
naiyaadha kal manaminge nadhiyaanadha kettiyaa
maunaththai pazhagum ilaiya munivargalai paarththiyaa
kal illaa nenjam pugalum mazhalai chol kettiyaa
pinju kuzhandhaiyum ivanai konjugiraar paarththiyaa
pitthaay thirindha gopiyar anbai minjugiraar paarththiyaa
kudukudppai pola kaiyai udharugiraan paarthiyaa
kodiya vidhi thool thoolaaga udhirvadhai paarththiyaa
sada sadavenradhira pesi saadugiraan paarththiyaa - nammai
chattena dhisai thiruppum chaathuryam kettiyaa
pon porulil vechcha aasai poganju pochchu paarththiyaa
pettiyile vechchu poottum aasai pochchu paarththiyaa
ganniyaththai penum kadamai veerargalai paarththiyaa
kalimannaay kidandha endhan kavidhai idho kettiyaa
பைஜாமா குர்த்தா போட்டு பகவானை பார்த்தியா - இவன்
பார்வை சொல்லும் அர்த்தம் எல்லாம் பல கோடி கேட்டியா
நைஸாக வலையை நம்மில் வீசுகிறான் பார்த்தியா
நையாத கல்மனமிங்கே நதியானத கேட்டியா
மௌனத்தை பழகும் இளைய முனிவர்களைப் பார்த்தியா
கல் இல்லா நெஞ்சம் புகலும் மழலைச்சொல் கேட்டியா
பிஞ்சுக் குழந்தையும் இவனை கொஞ்சுகிறார் பார்த்தியா
பித்தாய் திரிந்த கோபியர் அன்பை மிஞ்சுகிறார் பார்த்தியா
குடுகுடுப்பை போல கையை உதறுகிறான் பார்த்தியா
கொடிய விதி தூள்தூளாக உதிர்வதைப் பார்த்தியா
சடசடவென்றதிரப் பேசி சாடுகிறான் பார்த்தியா - நம்மை
சட்டென திசை திருப்பும் சாதுர்யம் கேட்டியா
பொன் பொருளில் வெச்ச ஆசை பொகஞ்சு போச்சு பார்த்தியா
பெட்டியிலே வெச்சு பூட்டும் ஆசை போச்சு பார்த்தியா
கண்ணியத்தை பேணும் கடமை வீரர்களைப் பார்த்தியா
களிமண்ணாய் கிடந்த எந்தன் கவிதை இதோ கேட்டியா
Comments