top of page

Padhuka Ramayanam

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 5 min read

Ayoththi maa nagarile aiyan Sri Ramanaay azhagaay thavazhndha paadham

arpudha isai koottum thandai kinkinigalum asaiya nadandha paadham

dharmaththai nilai naatta thaarani thannile thaan vandha vizhnu paadham

karmaththai sei palan naan tharuvaen ena karunaiyodu sonna paadham


sooriya kulaththavarin perumai vilangida poovulagu vandha paadham

sodharar naalvaraay thonriyae boomiyai sorggamaay seidha paadham

kosalai seidha pala poojaiyaal thaeindhadhaam sri ranganadhan paadham - aval

kondadhoru puththira yekkam thanikkavae thaanae uvandha paadham


puththira kaameshti yaagaththilae thonra thiruvulam konda paadham

buvanaththai oar kudai keezh aalavae vandha sri ramachandhran paadham

rishya sringarin mandhira uchchaadana rithaththil uthiththa paadham - dheva

rishigal thigaikkavae thanga kalasaththil paayasamaana paadham


kosalai kaigaeyi sumiththirai arundha avar kula vilakkaana paadham

govindhanum aadhi seshanum sangodu chakkaramaana paadham

lakshmanan baradhan chathrukkananudan aadi thirindha paadham

latchiya nokkudan latchana purushanaam dhasaratha raman padham


araththirku oruvanaam dhasarathan maganaagi avan kali theerththa paadham - avan

arubadhinaayira varuda thavaththaalae avaniyil vandha paadham

maanidanaay thonri makkal koottaththudan magizhvaay kalandha paadham

maayangal yedhumae seyyaadha dhevamaay mannil thavazhndha paadham


vaa enru dhasarathan azhaikkavae avan munnae vandhu panindha paadham

po ena solginra avan aaval purindhu than pinnazhagu thandha paadham

mannil pirandha oru manmadha vadivamaam maadhava raman paadham

adaiya oru pennaay piravaadhu ponaen ena pirarai yengida vaiththa paadham


thandhai sol mikkadhor mandhiram illai ena thaan urudhi konda paadham

thaayaval kosalai kaikaeyi sumiththirai sol thattaadha paadham

adalaeru ennavae kausigan velvithanai kaakka nadandha paadham

aniyaayam kanda idam adakki odukkavae adhatti ezhundha paadham


palai athipalai ennum mandhira upadhesam muniyidam petra paadham

pagalavan polavae dhegam oli sindha gambeeram konda paadham

thaadagai arakkiyae aayinum pennena thayangiyae ninra paadham

thagaadhavalai kollal dharumamena guru solla thaan paayndhu azhiththa paadham


kodhandam oliththume vanamellaam adhirndhida kobamaay ezhundha paadham

arakkar kora uruvam saayththumae velvikku vaeliyaay ninra paadham

kallai midhiththu oru pennaakki agaligai kadum saabam theerththa paadham - nam

kann munnae nadamaadum dheivamaay nirkinra karunai Sivashankar paadham


kai vannam kaattiyae thaadagaiyai konra maivannan raaman padham

kaal vannam kondumae agaligai saabaththai theerththa raguraman paadham

sollukku oruvan villukkum oruvanena thollulagam paniyum paadham

soozhginra maayaiyin pidiyilae sikkaamal kaakkavae vandha paadham


mithilaapuri nokki munivanin pinnaalae midukkaay nadandha paadham

minnal vizhi seethaiyai kannikaa maadaththil kandangu ninra paadham

villilae naanaetri pollenru adhu odiya veeram vilaiththa paadham

melliyal vaidhaegi manamaalai yerkavae menmaiyaay nadandha paadham


seethaiyai thandhida janakanavan poojiththa sundhara raman paadham

seelamaa munivanaam vasishtanin munnaale thirumanam konda paadham

villai naanaaetru ena parasuraman solla veeru kondezhundha paadham - avan

nil rama unnaiyae yaan panindhaen ena ninaindharul seidha paadham


pattaabishaegaththin vaibavangal yerka padharaamal nadandha paadham

paththini seethaiyodu lakshmanan pin thodara kaattil nadandha paadham

bakthanaam guhanavan oadaththilae yeri paravasam konda paadham

barathwaja rishigalin anbilae kattundu panindhangu ninra paadham


barathanin kaigalil paadhugaiyai thandhu parivudan ninra paadham - avan

sirameedhilae sumandhu semmalar thooviyae ariyanai vaiththa paadham

chiththira koodaththil siru kudil vaazhvilae sandhosham konda paadham

sridhaeviyaal dhinam saeviththu varudiya sri raman thiruppaadhamae


panjavadiyil azhagu konjidum soozhalai kandu magizhndha paadham

paadhagi soorppanagai sodhararaam kara dhooshnaraiyum vadhaiththa paadham

kanngal imaiyaamal thambi villaendhida thaan oayvu konda paadham

pon maanai kondu vara pin thodarndhu adhan poi kandu thigaiththa paadham


vaidhaegi vaidhaegi enru pulambi ivvaiyamae alaindha paadham

vaiyam alandhavanae nondhu kalaiththadhaay nangu nadiththa paadham

jataayuvin thyaagam thannaiyae kandurugi thaviththangu ninra paadham

kadamai thanadhenru avan eema kadan seidhu karunai pozhindha paadham


sabariyin aasramam senru kaniundu santhosham konda paadham

pambaiyin saundharya maangalai seethaiyudan oppittu thavithazhudhu ninra paadham

andhana vadivaththil vandha hanumanin sollil negizhndha paadham - avan

thol meedhu yeriyae rishyamuka parvadham senru adaindha paadham


sukreevanai thazhuvi unnudan naam aruvar enru uraiththa paadham

sulabamaay vaaliyai naan velluvaen iniyum anjarka enra paadham

vaaliyin van seyal kandu poraadhu vadhaiththu azhiththa paadham

naavan hanumanai therndhumae seethaiyai thaeda azhaththa paadham


kanaiyaazhi thannaiyae manaiyaalidam thara adaiyaalam thandha paadham

kadhaiyena oariru sambavangal koori kandu vara paniththa padham

kandaen seethaiyai ennum kural kaettu kalippil midhandha paadham

karpudaiyaal thandha choodamani kandu vimmi thudiththa paadham


anumanae unakkoru varam tharuvaenena anbudan uraiththa paadham - avan

annalae ummaiyae ennulae thaarumena aalinganam seidha paadham

maagendhira malai meedhu yeriyae ilangai maa nagarinai kanda paadham - andha

maagendhira giri thandha maayanae inringu mannadi vandha paadham


saedhuvil anai katti vaanara saenaiyodu serndhu nadandha paadham

saranamenrae vandha vibeeshananai thazhuvi ezhuvar naam enra paadham

vaedan vaanaran arakkanai sodhararaay viruppudan yetra paadham

vaendhanaay vibeeshananai ilangaikku mudi sootti eliyanaay ninra paadham


kunranaiya kumbakarnanin siramadhai thunditherindha paadham

kodi kodi arakkar saenaigalai azhiththa kodhanda raman paadham

porkkalam thannilae moorkkanaam raavananai thidamaay edhirththa paadham

inru poy naalai vaa enrae uraiththu than irakkaththai sonna paadham


paththu thalaigalaiyum padhamaagavae aruththu paaaril erindha paadham

meththenum malligai idhayaththaal maithiliyai meettu nadandha paadham

ayoththi nagar maandhar aanandhamaagavae poojikka ninra paadham

vasishtan aasiyodu pattaabishaegamaam vaibavam hanumanodu konda paadham


kannanum shankaranum oruvarena arai koovi kaasini vandha paadham

kaliyuga dhaevanaay kalki avadhaaranaay vandha Sivashankar paadham

mannadi thalaththilae magimaigal pala seidhu maanbudan ninra paadham

annaiyaay thandhaiyaay guruvumaay dheivamaay allum Sivashankar paadham


sarvamum Sivashankaram - saththiyam Sivashankaram

saasvatham Sivashankaram - shankaram Sivashankaram

Sivashankara paahimaam - Sivashankara rakshammaam



அயோத்தி மா நகரிலே ஐயன் ஸ்ரீ ராமனாய் அழகாய் தவழ்ந்த பாதம்

அற்புத இசை கூட்டும் தண்டை கிண்கிணிகளும் அசைய நடந்த பாதம்

தர்மத்தை நிலைநாட்ட தாரணி தன்னிலே தான் வந்த விஷ்ணு பாதம்

கர்மத்தை செய் பலன் நான் தருவேன் என கருணையொடு சொன்ன பாதம்


சூரிய குலத்தவரின் பெருமை விளங்கிட பூவுலகு வந்த பாதம்

சோதரர் நால்வராய் தோன்றியே பூமியைச் சொர்க்கமாய் செய்த பாதம்

கோசலை செய்த பல பூஜையால் தேய்ந்ததாம் ஸ்ரீ ரங்கநாதன் பாதம் - அவள்

கொண்டதொரு புத்திர ஏக்கம் தணிக்கவே தானே உவந்த பாதம்


புத்திர காமேஷ்டி யாகத்திலே தோன்றத் திருவுளம் கொண்ட பாதம்

புவனத்தை ஓர் குடைக்கீழ் ஆளவே வந்த ஸ்ரீ ராமச்சந்திரன் பாதம்

ரிஷ்ய ச்ருங்கரின் மந்திர உச்சாடன ரிதத்தில் உதித்த பாதம் - தேவ

ரிஷிகள் திகைக்கவே தங்க கலசத்தில் பாயசமான பாதம்


கோசலை கைகேயி சுமித்திரை அருந்த அவர் குல விளக்கான பாதம்

கோவிந்தனும் ஆதி சேஷனும் சங்கோடு சக்கரமான பாதம்

லக்ஷ்மணன் பரதன் சத்ருக்கனனுடன் ஆடித் திரிந்த பாதம்

லட்சிய நோக்குடன் லட்சண புருஷனாம் தசரத ராமன் பாதம்


அறத்திற்கு ஒருவனாம் தசரதன் மகனாகி அவன் கலி தீர்த்த பாதம் - அவன்

அறுபதினாயிர வருட தவத்தாலே அவனியில் வந்த பாதம்

மானிடனாய்த் தோன்றி மக்கள் கூட்டத்துடன் மகிழ்வாய்க் கலந்த பாதம்

மாயங்கள் ஏதுமே செய்யாத தெய்வமாய் மண்ணில் தவழ்ந்த பாதம்


வா என்று தசரதன் அழைக்கவே அவன் முன்னே வந்து பணிந்த பாதம்

போ எனச் சொல்கின்ற அவன் ஆவல் புரிந்து தன் பின்னழகு தந்த பாதம்

மண்ணில் பிறந்த ஒரு மன்மத வடிவமாம் மாதவ ராமன் பாதம்

அடைய ஒரு பெண்ணாய்ப் பிறவாது போனேன் எனப்

பிறரை ஏங்கிட வைத்த பாதம்


தந்தை சொல் மிக்கதோர் மந்திரம் இல்லை எனத் தான் உறுதி கொண்ட பாதம்

தாயவள் கோசலை கைகேயி சுமித்திரை சொல் தட்டாத பாதம்

அடலேறு என்னவே கௌசிகன் வேள்விதனைக் காக்க நடந்த பாதம்

அநியாயம் கண்ட இடம் அடக்கி ஒடுக்கவே அதட்டி எழுந்த பாதம்


பலை அதிபலை என்னும் மந்திர உபதேசம் முனியிடம் பெற்ற பாதம்

பகலவன் போலவே தேகம் ஒளி சிந்த கம்பீரம் கொண்ட பாதம்

தாடகை அரக்கியே ஆயினும் பெண்ணெனத் தயங்கியே நின்ற பாதம்

தகாதவளைக் கொல்லல் தருமமென குரு சொல்லத் தான் பாய்ந்து அழித்த பாதம்


கோதண்டம் ஒலித்துமே வனமெல்லாம் அதிர்ந்திடக் கோபமாய் எழுந்த பாதம்

அரக்கர் கோர உருவம் சாய்த்துமே வேள்விக்கு வேலியாய் நின்ற பாதம்

கல்லை மிதித்து ஒரு பெண்ணாக்கி அகலிகை கடும் சாபம் தீர்த்த பாதம் - நம்

கண் முன்னே நடமாடும் தெய்வமாய் நிற்கின்ற கருணை சிவசங்கர் பாதம்


கை வண்ணம் காட்டியே தாடகையைக் கொன்ற மைவண்ணன் ராமன் பாதம்

கால் வண்ணம் கொண்டுமே அகலிகை சாபத்தை தீர்த்த ரகுராமன் பாதம்

சொல்லுக்கு ஒருவன் வில்லுக்கும் ஒருவனெனத் தொல்லுலகம் பணியும் பாதம்

சூழ்கின்ற மாயையின் பிடியிலே சிக்காமல் காக்கவே வந்த பாதம்


மிதிலாபுரி நோக்கி முனிவனின் பின்னாலே மிடுக்காய் நடந்த பாதம்

மின்னல் விழி சீதையைக் கன்னிகா மாடத்தில் கண்டங்கு நின்ற பாதம்

வில்லிலே நாணேற்றிப் பொல்லென்று அது ஒடிய வீரம் விளைத்த பாதம்

மெல்லியள் வைதேகி மணமாலை ஏற்கவே மென்மையாய் நடந்த பாதம்


சீதையை தந்திட ஜனகனவன் பூசித்த சுந்தரராமன் பாதம்

சீலமா முனிவனாம் வசிஷ்டனின் முன்னாலே திருமணம் கொண்ட பாதம்

வில்லை நாணேற்று எனப் பரசுராமன் சொல்ல வீறு கொண்டெழுந்த பாதம் - அவன்

நில் ராமா உன்னையே யான் பணிந்தேன் என நினைந்தருள் செய்த பாதம்


பட்டாபிஷேகத்தின் வைபவங்கள் ஏற்கப் பதறாமல் நடந்த பாதம்

பத்தினி சீதையொடு லக்ஷ்மணன் பின் தொடரக் காட்டில் நடந்த பாதம்

பக்தனாம் குகனவன் ஓடத்திலே ஏறிப் பரவசம் கொண்ட பாதம்

பரத்வாஜ ரிஷிகளின் அன்பிலே கட்டுண்டு பணிந்தங்கு நின்ற பாதம்


பரதனின் கைகளில் பாதுகையைத் தந்து பரிவுடன் நின்ற பாதம் - அவன்

சிரமீதிலே சுமந்து செம்மலர்த் தூவியே அரியணை வைத்த பாதம்

சித்திர கூடத்தில் சிறுகுடில் வாழ்விலே சந்தோஷம் கொண்ட பாதம்

ஸ்ரீதேவியாள் தினம் சேவித்து வருடிய ஸ்ரீராமன் திருப்பாதமே


பஞ்சவடியில் அழகு கொஞ்சிடும் சூழலைக் கண்டு மகிழ்ந்த பாதம்

பாதகி சூர்ப்பனகை சோதரராம் கரதூஷணரையும் வதைத்த பாதம்

கண்கள் இமையாமல் தம்பி வில்லேந்திடத் தான் ஓய்வு கொண்ட பாதம்

பொன்மானை கொண்டு வரப் பின் தொடர்ந்து அதன் பொய் கண்டு திகைத்த பாதம்


வைதேகி வைதேகி என்று புலம்பி இவ்வையமே அலைந்த பாதம்

வையம் அளந்தவனே நொந்து களைத்ததாய் நன்கு நடித்த பாதம்

ஜடாயுவின் தியாகம் தன்னையே கண்டுருகித் தவித்தங்கு நின்ற பாதம்

கடமை தனதென்று அவன் ஈமக்கடன் செய்து கருணை பொழிந்த பாதம்


சபரியின் ஆசிரமம் சென்று கனியுண்டு சந்தோஷம் கொண்ட பாதம்

பம்பையின் சௌந்தர்ய மான்களை சீதையுடன் ஒப்பிட்டுத் தவித்தழுது நின்ற பாதம்

அந்தண வடிவத்தில் வந்த அனுமனின் சொல்லில் நெகிழ்ந்த பாதம் - அவன்

தோள்மீது ஏறியே ரிஷியமுக பர்வதம் சென்று அடைந்த பாதம்


சுக்ரீவனைத் தழுவி உன்னுடன் நாம் அறுவர் என்று உரைத்த பாதம்

சுலபமாய் வாலியை நான் வெல்லுவேன் இனியும் அஞ்சற்க என்ற பாதம்

வாலியின் வன் செயல் கண்டு பொறாது வதைத்து அழித்த பாதம்

நாவன் அனுமனைத் தேர்ந்துமே சீதையைத் தேட அழைத்த பாதம்


கணையாழி தன்னையே மனையாளிடம் தர அடையாளம் தந்த பாதம்

கதையென ஓரிரு சம்பவங்கள் கூறிக் கண்டு வரப் பணித்த பாதம்

கண்டேன் சீதையை என்னும் குரல் கேட்டு களிப்பில் மிதந்த பாதம்

கற்புடையாள் தந்த சூடாமணி கண்டு விம்மித் துடித்த பாதம்


அனுமனே உனக்கொரு வரம் தருவேனென அன்புடன் உரைத்த பாதம் - அவன்

அண்ணலே உம்மையே என்னுளே தாருமென ஆலிங்கனம் செய்த பாதம்

மாகேந்திர மலை மீது ஏறியே இலங்கை மாநகரினைக் கண்ட பாதம் - அந்த

மாகேந்திர கிரி தந்த மாயனே இன்றிங்கு மண்ணடி வந்த பாதம்


சேதுவில் அணைகட்டி வானர சேனையோடு சேர்ந்து நடந்த பாதம்

சரணமென்றே வந்த விபீஷணனைத் தழுவி எழுவர் நாம் என்ற பாதம்

வேடன் வானரன் அரக்கனைச் சோதரராய் விருப்புடன் ஏற்ற பாதம்

வேந்தனாய் விபீஷணனை இலங்கைக்கு முடிசூட்டி எளியனாய் நின்ற பாதம்


குன்றனைய கும்பகர்ணனின் சிரமதைத் துண்டித்தெறிந்த பாதம்

கோடி கோடி அரக்கர் சேனைகளை அழித்த கோதண்ட ராமன் பாதம்

போர்க்களம் தன்னிலே மூர்க்கனாம் ராவணனைத் திடமாய் எதிர்த்த பாதம்

இன்று போய் நாளை வா என்றே உரைத்துத் தன் இரக்கத்தைச் சொன்ன பாதம்


பத்துத் தலைகளையும் பதமாகவே அறுத்துப் பாரில் எறிந்த பாதம்

மெத்தெனும் மல்லிகை இதயத்தாள் மைதிலியை மீட்டு நடந்த பாதம்

அயோத்தி நகர் மாந்தர் ஆனந்தமாகவே பூசிக்க நின்ற பாதம்

வசிஷ்டன் ஆசியோடு பட்டாபிஷேகமாம் வைபவம் அனுமனொடு கொண்ட பாதம்


கண்ணனும் சங்கரனும் ஒருவரென அறைகூவிக் காசினி வந்த பாதம்

கலியுக தேவனாய் கல்கி அவதாரனாய் வந்த சிவசங்கர் பாதம்

மண்ணடித் தலத்திலே மகிமைகள் பல செய்து மாண்புடன் நின்ற பாதம்

அன்னையாய்த் தந்தையாய் குருவுமாய்த் தெய்வமாய் ஆளும் சிவசங்கர் பாதம்


சர்வமும் சிவ சங்கரம் - சத்தியம் சிவ சங்கரம்

சாஸ்வதம் சிவ சங்கரம் - சங்கரம் சிவ சங்கரம்

சிவசங்கர பாஹிமாம் - சிவசங்கர ரக்ஷமாம்

 
 
 

Recent Posts

See All
Paadaa paduthudhindha

Paadaa paduthudhindha Shankaram pambaram pol suththudhu paar senkaram maadaa uzhaikkudhindha yandhiram [namakkaaga] - idhu maaligaiya...

 
 
 
Paadhi udalai

Paadhi udalai sivan paththinikkeendha saedhi ulagengum arindhadhe - andha jodhi thandha kanal oadi vandhingu needhi kaappadhum arindhadhe...

 
 
 
Paaraayanam sei

Paaraayanam sei maname dhiname paaraayanam sei maname naaraayananaam Sivashankar naamathai paaraayanam sei maname oaraayiram murai...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page