Paaraayanam sei
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Paaraayanam sei maname dhiname
paaraayanam sei maname
naaraayananaam Sivashankar naamathai
paaraayanam sei maname
oaraayiram murai jabiththaal kooda
theeraadhinithidum thirunaamam
pallaayiramaam manthrangalaayinum
anaiathilum moolam iththirunaamam
pollaa piniyum pollaa thuyarum
nillaadhottidum thirunaamam
illaar enbaar jabiththaal podhum
ellaam arulidum thirunaamam
kallaay irundha manadhinar yaarum oar
sollaay pugazhndhidum thirunaamam
sonnaal mayakkum thirunaamam idhai
sonnaal podhum arul koodum
பாராயணம் செய் மனமே தினமே
பாராயணம் செய் மனமே
நாராயணனாம் சிவசங்கர் நாமத்தை
பாராயணம் செய் மனமே
ஓராயிரம் முறை ஜபித்தால் கூட
தீராதினித்திடும் திருநாமம்
பல்லாயிரமாம் மந்த்ரங்களாயினும்
அனைத்திலும் மூலம் இத்திருநாமம்
பொல்லா பிணியும் பொல்லா துயரும்
நில்லாதோட்டிடும் திருநாமம்
இல்லார் என்பார் ஜபித்தால் போதும்
எல்லாம் அருளிடும் திருநாமம்
கல்லாய் இருந்த மனதினர் யாரும் ஓர்
சொல்லாய் புகழ்ந்திடும் திருநாமம்
சொன்னால் மயக்கும் திருநாமம் இதை
சொன்னால் போதும் அருள் கூடும்
Commentaires