Purappattu varugudhoru
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Purappattu varugudhoru puyal kaatru
pon manaththai konda dheiva manakkaatru - naam
uruppadavae pidithizhukkum soorai kaatru
ullaththai kulira vaikkum vaadai kaatru
vanga kadalil ezhundhu vandha kaatru - perum
vallamaiyai thannullae vaiththa kaatru
sangamikka unnai thaedi vandha kaatru - Siva
Shankaramaay namai theendum sandhana kaatru
chennai nagaril seeri kilambia kaatru
jegamengum seeramaikka suzhalgira kaatru
unnai ennai uarththa sangu oodhum kaatru
ulagellaam valam varum urchaaga kaatru
podhigai malai thandha thamizh thenral kaatru
punniya kayilai malaiyil ninra kaatru
mahendhira giri thandha magimai kaatru - yezhu
malai meedhil arul tharum maadhava kaatru
vaedhaththai uyirppikka vandha kaatru
vaelvi pugaiyai ulagellaam visirum kaatru
aandavanai thannullae kanda kaatru - thannai
archiththu kalikkinra aanandha kaatru
annai thandhai pola anbu seyyum kaatru
andamellaam kaliyil kaakka vandha kaatru
sindhanaiyai ennul alli veesum kaatru
Siva shankaramdhaan ennulae pesum kaatru
புறப்பட்டு வருகுதொரு புயல் காற்று
பொன் மனத்தை கொண்ட தெய்வ மணக்காற்று - நாம்
உருப்படவே பிடித்திழுக்கும் சூறைக்காற்று
உள்ளத்தைக் குளிர வைக்கும் வாடைக்காற்று
வங்கக் கடலில் எழுந்து வந்த காற்று - பெரும்
வல்லமையைத் தன்னுள்ளே வைத்த காற்று
சங்கமிக்க உனைத்தேடி வந்த காற்று - சிவ
சங்கரமாய் நமை தீண்டும் சந்தனக்காற்று
சென்னை நகரில் சீறிக் கிளம்பிய காற்று
செகமெங்கும் சீரமைக்கச் சுழல்கிற காற்று
உன்னை என்னை உயர்த்த சங்கு ஊதும் காற்று
உலகெல்லாம் வலம் வரும் உற்சாகக் காற்று
பொதிகை மலை தந்த தமிழ்த் தென்றல் காற்று
புண்ணிய கயிலை மலையில் நின்ற காற்று
மகேந்திர கிரி தந்த மகிமைக் காற்று - ஏழு
மலை மீதில் அருள் தரும் மாதவக் காற்று
வேதத்தை உயிர்ப்பிக்க வந்த காற்று
வேள்விப் புகையை உலகெல்லாம் விசிறும் காற்று
ஆண்டவனைத் தன்னுள்ளே கண்ட காற்று - தன்னை
அர்ச்சித்துக் களிக்கின்ற ஆனந்தக் காற்று
அன்னை தந்தை போல அன்பு செய்யும் காற்று
அண்டமெல்லாம் கலியில் காக்க வந்த காற்று
சிந்தனையை என்னுள் அள்ளி வீசும் காற்று
சிவ சங்கரம் தான் என்னுள்ளே பேசும் காற்று
Commentaires