Pullaankuzhale enna
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Pullaankuzhale enna punniyam seidhaay - engal
brindhaavana kumaaran ponnidhazh suvaithirukka
ellaam valla iraivan engal Sivashankar unai
eduththu vaayil poruththi iniththa muththam tharave
vedhangal naangum ivanpaadhathile kidakka
vetri tharum sangu chakram karangalile irukka
ilakkumi dheviyaval idhayaththil amarndhirukka
latchiyam kondanaiyo ivan umizh neer suvaikka
moongilaay thazhaithadhuvum mundhai thavappayano
muyanru thulaiyittadhum kazhanra vinaiththodaro
kannanin mei theenda enna thavappayano - un
gaanangalil silirkka yaam seidha thavappayano
புல்லாங்குழலே என்ன புண்ணியம் செய்தாய் - எங்கள்
ப்ருந்தாவன குமாரன் பொன்னிதழ் சுவைத்திருக்க
எல்லாம் வல்ல இறைவன் எங்கள் சிவசங்கர் உனை
எடுத்து வாயில் பொருத்தி இனித்த முத்தம் தரவே
வேதங்கள் நான்கும் இவன் பாதத்திலே கிடக்க
வெற்றி தரும் சங்கு சக்ரம் கரங்களிலே இருக்க
இலக்குமி தேவியவள் இதயத்தில் அமர்ந்திருக்க
லட்சியம் கொண்டனையோ இவன் உமிழ் நீர் சுவைக்க
மூங்கிலாய்த் தழைத்ததுவும் முந்தை தவப்பயனோ
முயன்று துளையிட்டதும் கழன்ற வினைத்தொடரோ
கண்ணனின் மெய் தீண்ட என்ன தவப்பயனோ - உன்
கானங்களில் சிலிர்க்க யாம் செய்த தவப்பயனோ
Kommentare