Puguvaar Avar Pinne
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
புகுவார் அவர் பின்னே புகலாம் [பாபா] - வெகு
லகுவாகவே மோட்ச கதி தன்னைப் பெறலாம்
வெகுமானமாக வந்தான் சங்கரன் [நமக்கென] - இந்த
வேதியனின் திருவடியை வேண்டிப் பிடித்து விட்டால்
தகுமோ எனக்கென அஞ்சாதே [எனக்கிது] - எங்கள்
சிகிவாகனன் கை விடானென்று உறுதிகொள்
மாணிக்க ஆசனத்தில் தங்க மயமானவன்
மனதிரங்கி நமை மீட்க அன்பு வைத்து வந்தவன்
இதுதானே எந்தனது கடைப் பிறவி என்கிறான்
இப்போதே வந்து விடு இனி நேரமில்லை என்கிறான்
இது தருணம் தவறவிட்டால் கதி தர யாருமில்லை
இவனை நாம் சரணடந்தால் மறுபிறவி நமக்கில்லை
Comments