Poyyaam vaazhkkai
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Poyyaam vaazhkkai ariyaadhe
pozhudhum tharukki thiriyum ulam
koyyaadhiruththal saridhaano
kurammaadhanaibava muraidhaano
naiyaa manaththai inneruppu
nanraay urukki tharavenru
maiyaam niram kol mani vanna
maa maayaa thoodhu selvaayae
kaiyaal vaelai ivan thaangi - en
kanakkai theerkkum oru naalil - thudhi
seyyaadhirundha pizhai poruththu
saenaapadhi aatkolvaano
aiyaa endhan kodu vinaigal
aiyo solli maalaadhu
vaiyaapuri urai sivan magavae - siru
paiyaa Shankara arulvaayae
பொய்யாம் வாழ்க்கை அறியாதே
பொழுதும் தருக்கி திரியும் உளம்
கொய்யாதிருத்தல் சரிதானோ
குறமாதணைபவ முறைதானோ [உளம்]
நையா மனத்தை இந்நெருப்பு
நன்றாய் உருக்கி தரவென்று
மையாம் நிறம் கொள் மணிவண்ணா
மாமாயா தூது செல்வாயே
கையால் வேலை இவன் தாங்கி - என்
கணக்கை தீர்க்கும் ஒரு நாளில் - துதி
செய்யாதிருந்த பிழை பொறுத்து
சேனாபதி ஆட்கொள்வானோ
ஐயா எந்தன் கொடுவினைகள்
ஐயோ சொல்லி மாளாது
வையாபுரி உறை சிவன் மகவே - சிறு
பையா சங்கரா அருள்வாயே
Comments