Porkarangal aaraeeril
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Porkarangal aaraeeril booshanamaay aayudham yen
pongi ezha manaminri vel muruga nirpadhum yen
karpagathin kannmaniye kaduvinaiyen azhudha kanneer
sorpamo sol muruga silirthezhave manamillaiyo
aariru sevi irundhum alaruvadhu ketkilaiyo
panniru vizhi irundhum paavai mugam paarkkilaiyo
vel enbadhu un kaiyil vilaiyaatu porulthaano
kaal kadukka naan ninrum gavanam ennil varavillaiyo
பொற்கரங்கள் ஆறீரில் பூஷணமாய் ஆயுதம் ஏன்
பொங்கியெழ மனமின்றி வேல் முருகா நிற்பதும் ஏன்
கற்பகத்தின் கண்மணியே கடுவினையேன் அழுத கண்ணீர்
சொற்பமோ சொல் முருகா சிலிர்த்தெழவே மனமில்லையோ
ஆறிரு செவி இருந்தும் அலறுவது கேட்கிலையோ
பன்னிரு விழி இருந்தும் பாவை முகம் பார்க்கிலையோ
வேல் என்பது உன் கையில் விளையாட்டுப் பொருள்தானோ
கால் கடுக்க நான் நின்றும் கவனம் என்னில் வரவில்லையோ
Comments