Porkaalam ini porkaalam
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Porkaalam ini porkaalam
boomiyilae oru porkaalam
ikkaalam idhu kalikaalam - idhu
kazhindha pinne varum narkaalam
mukkaalamum unar mona thavasigal
munne vandhidum oru kaalam
ekkaalamume ilamaiyodirukkum
iniya dhevargal ezhum kaalam
karkaalam mudhal tharkaalam varai
kaana kidaikkadhoru kaalam
kadavul irangi kadaithetri nammai
kadavulaay maatrum thirukkaalam
Sivashankaramadhu kaliyugamazhiththu
chiththaththaal pon yugam srushtiththu
sri krishnan avan simmaasanam mel
siriththe amarum oru kaalam
பொற்காலம் இனி பொற்காலம்
பூமியிலே ஒரு பொற்காலம்
இக்காலம் இது கலிகாலம் - இது
கழிந்த பின்னே வரும் நற்காலம்
முக்காலமும் உணர் மோனத்தவசிகள்
முன்னே வந்திடும் ஒரு காலம்
எக்காலமுமே இளமையோடிருக்கும்
இனிய தேவர்கள் எழும் காலம்
கற்காலம் முதல் தற்காலம் வரை
காணக் கிடைக்காதொரு காலம்
கடவுள் இறங்கி கடைத்தேற்றி நம்மைக்
கடவுளாய் மாற்றும் திருக்காலம்
சிவசங்கரமது கலியுகமழித்து
சித்தத்தால் பொன் யுகம் சிருஷ்டித்து
ஸ்ரீ க்ருஷ்ணன் அவன் சிம்மாசனம் மேல்
சிரித்தே அமரும் ஒரு காலம்
Comments