Poorana Brammamenum
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Poorana brammamenum pudhu dheivm vandhadhammaa
kaalaththin kattaayamaay kaliyugaththin avasiyamaay
kaarana kaariyamaay kaatsi thandhaan shankaranul
naarana rupamadhai naatti vittaan kaelaithanil
dhasaavadhaara chinnam aththaniyum kaiyil vaiththu
narasimma v araaha vaenkatanaay ezhundharuli
arththa naareesvararkkum angaththile baagam thandhu
archchaavadhaarathullee shankaranin aanmaa vaiaththu
pillaiyaar murugan vidaiyeru sivan aiyappan
paandurangan srirangan pattabi ramanodu
lakshmi sarasvathi sri raja rajeshvariyaay
anumantha prabu enrum alankaaram yaavum yaetru
aiyanivan vnadha pinne vaiyagame oliyaachchu
agilam eeraezhiyum anbaale valaichchaachchu
paalaiyaay kidandha idam solaivanam aayaachchu
saalaigal yaavaiyume sandhanaththaal mezhugiyaachchu
niththiya yaagam poojai sirathaiyaaga nadakkiradhu
abishegam alangkaaram aanandham tharugiradhu
atchaya paathiraminge annam padaikkiradhu - engal
ratchagan nirkumidam rama rajjiyam aagiradhu
பூரண ப்ரம்மமெனும் புது தெய்வம் வந்ததம்மா
காலத்தின் கட்டாயமாய் கலியுகத்தின் அவசியமாய்
காரண காரியமாய் காட்சி தந்தான் சங்கரனுள்
நாரண ரூபமதை நாட்டி விட்டான் கேளைதனில்
தச அவதார சின்னம் அத்தனையும் கையில் வைத்து
நரசிம்ம வராஹ வேங்கடனாய் எழுந்தருளி
அர்த்த நாரீஸ்வரர்க்கும் அங்கத்திலே பாகம் தந்து
அர்ச்சாவதாரத்துள்ளே சங்கரனின் ஆன்மா வைத்து
பிள்ளையார் முருகன் விடையேறு சிவன் ஐயப்பன்
பாண்டுரங்கன் ஸ்ரீரங்கன் பட்டாபி ராமனொடு
லக்ஷ்மி சரஸ்வதி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியாய்
அனுமந்த ப்ரபு என்றும் அலங்காரம் யாவும் ஏற்று
ஐயனிவன் வந்த பின்னே வையகமே ஒளியாச்சு
அகிலம் ஈரேழையும் அன்பாலே வளைச்சாச்சு
பாலையாய் கிடந்த இடம் சோலைவனம் ஆயாச்சு
சாலைகள் யாவையுமே சந்தனத்தால் மெழுகியாச்சு
நித்திய யாகம் பூஜை சிரத்தையாக நடக்கிறது
அபிஷேகம் அலங்காரம் ஆனந்தம் தருகிறது
அட்சய பாத்திரமிங்கே அன்னம் படைக்கிறதெங்கள்
ரட்சகன் நிற்குமிடம் ராமராஜ்ஜியம் ஆகிறது
Comments