Pirandhu maramena
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Pirandhu maramena valarndhu moodanaay
irundha ennai kaaththavane
marundhu thandhenai arundhu nee ini
thirundhu enru uraiththavane - kann
thirandhu bava vinai arindhu enakkum
sirandha vaazhvinai thandhavane
kunindha siramodu kumaindha nenjinil
kuliraay vandhu nirandhavane
marandhu ulagile thirindhu marubadi
thirumbi vandhum anaithavane
karandha paalile kalandha nanjena
kasandha kaalam maraithavane
anindha anbenum arul nagaithanai
aniviththullam magizhbavane
thirandha manadhodu parandhu vandhenil
kalandha Sri Sivashankarane
பிறந்து மரமென வளர்ந்து மூடனாய்
இருந்த என்னை காத்தவனே
மருந்து தந்தெனை அருந்து நீ இனி
திருந்து என்று உரைத்தவனே - கண்
திறந்து பவவினை அறிந்து எனக்கும்
சிறந்த வாழ்வினை தந்தவனே
குனிந்த சிரமொடு குமைந்த நெஞ்சினில்
குளிராய் வந்து நிறைந்தவனே
மறந்து உலகிலே திரிந்து மறுபடி
திரும்பி வந்தும் அணைத்தவனே
கறந்த பாலிலே கலந்த நஞ்சென
கசந்த காலம் மறைத்தவனே
அணிந்த அன்பெனும் அருள் நகைதனை
அணிவித்துள்ளம் மகிழ்பவனே
திறந்த மனதொடு பறந்து வந்தெனில்
கலந்த ஸ்ரீ சிவசங்கரனே
Comentários