Pillaiyaar pattiyin
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Pillaiyaar pattiyin pinju kuzhandhai
per solli azhaiththadhammaa - andha
piththan maganavan siththaadalai enni
nenjam silirkkudhammaa
kollai adiththa manaththulle ninradhu
gollena nagaiththadhammaa - andha
killai mozhiyil irangiya ullam
kirukkaagi pochudhammaa
alla alla kuraiyaa navanidhiyo
aani muththu charamo
aganra vizhigalil suzhanru varuvadhu
anda saraasaramo
vallal avan kaigal vaari tharum anbu
vatraa samuthiramo
vaazhthi varam thara valindhu azhaiththadhu
eedhenna arpudhamo
kallam seidhu anru vennai thirudiya
kannan marumagano
karpagamaam engal koppudaiyaal petra
kaaviya maamagano
ullaththile bakthi oora vaithaal adhai
unna varuvaano - en
utravan paadhathil patru vaitha ennil
onraay kalavaano
பிள்ளையார் பட்டியின் பிஞ்சு குழந்தை
பேர் சொல்லி அழைத்ததம்மா - அந்த
பித்தன் மகனவன் சித்தாடலை எண்ணி
நெஞ்சம் சிலிர்க்குதம்மா
கொள்ளையடித்த மனத்துள்ளே நின்றது
கொல் என நகைத்ததம்மா - அந்த
கிள்ளை மொழியில் இறங்கிய உள்ளம்
கிறுக்காகி போச்சுதம்மா
அள்ள அள்ள குறையா நவநிதியோ
ஆணி முத்துச்சாரமோ
அகன்ற விழிகளில் சுழன்று வருவது
அண்ட சராசரமோ
வள்ளல் அவன் கைகள் வாரித் தரும் அன்பு
வற்றா சமுத்திரமோ
வாழ்த்தி வரம் தர வலிந்து அழைத்தது
ஈதென்ன அற்புதமோ
கள்ளம் செய்து அன்று வெண்ணை திருடிய
கண்ணன் மருமகனோ
கற்பகமாம் எங்கள் கொப்புடையாள் பெற்ற
காவிய மாமகனோ
உள்ளத்திலே பக்தி ஊற வைத்தாள் அதை
உண்ண வருவானோ என்
உற்றவன் பாதத்தில் பற்று வைத்த என்னில்
ஒன்றாய் கலவானோ
Kommentare