Perumaal ivan
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Perumaal ivan periya aalivan
thirumaal ivan dhuriya nilai tharum
nedumaal ivan niraiya tharubavan
sudum thuyarilum sugaththai arulbavan
idaththil dheviyai ezhilaay vaithavan
iru puram simma varaaha mugaththavan
sivaththai lingamaay agaththil kondavan
sirandha machcha koormamaay ninravan
kariya mugaththil venn naamam thariththavan
karangal paththil irai chinnam thariththavan
uriya padhaththinai unakkenrum alippavan
urangidaamal ivvulaginai kaappavan
பெருமாளிவன் பெரிய ஆளிவன்
திருமாலிவன் துரிய நிலை தரும்
நெடுமாலிவன் நிறைய தருபவன்
சுடும் துயரிலும் சுகத்தை அருள்பவன்
இடத்தில் தேவியை எழிலாய் வைத்தவன்
இருபுறம் சிம்ம வராஹ முகத்தவன்
சிவத்தை லிங்கமாய் அகத்தில் கொண்டவன்
சிறந்த மச்ச கூர்மமாய் நின்றவன்
கரிய முகத்தில் வெண் நாமம் தரித்தவன்
கரங்கள் பத்தில் இறைச்சின்னம் தரித்தவன்
உயரிய பதத்தினை உனக்கென்றும் அளிப்பவன்
உறங்கிடாமல் இவ்வுலகினை காப்பவன்
Comments