top of page

Periya Kadavull Nee

  • SamratchanaLyrics
  • Feb 18, 2019
  • 1 min read

பெரிய கடவுள் நீ

மஹா பெரியவாளும் நீ - பூரண

ப்ரம்மமானவன் நீ

நரசிம்மம்மானவன் நீ

அரிய பொக்கிஷம் நீ

ஆனந்த நர்த்தனன் நீ - உனக்கே

உரிய உரிமையால் தடுத்து

ஆட்கொள்ள வந்தவன் நீ - சங்கரா


கரிய திருமால் நீ கருணை

வடிவமானவன் நீ

கடவுள் மாமா நீ எங்கள்

உடன் உறைபவன் நீ

படரும் இருள் ஒழிக்க உதித்த

பரிதியானவன் நீ - எங்கள்

இடர்களை எரித்து அழிக்கும்

இரக்கம் கொண்டவன் நீ


நால்வர் பாடி வைத்த உயர்

நான்மறைப் பொருளும் நீ

நாரதாதியரும் போற்றும் ஸ்ரீ

பத்ரி நாராயணன் நீ

பாரதப் போரினிலே பார்த்த

சாரதியானவன் நீ - எங்கள்

பாரத நாட்டினுக்கே பெருமை

உயர்த்த வந்தவன் நீ - சங்கரா


கோரும் வரங்களெல்லாம் அளிக்கும்

கோவிந்தராஜன் நீ

கொண்ட கொள்கையிலே மாறா

குணமுடையவன் நீ

சேர வாரீர் ஜகத்தீரே என

கூவி அழைப்பவன் நீ - உன்

சேவடிதனிலே வைகுந்தம்

சேர்க்கும் மாதவன் நீ - சங்கரா

 
 
 

Recent Posts

See All
Paadaa paduthudhindha

Paadaa paduthudhindha Shankaram pambaram pol suththudhu paar senkaram maadaa uzhaikkudhindha yandhiram [namakkaaga] - idhu maaligaiya...

 
 
 
Paadhi udalai

Paadhi udalai sivan paththinikkeendha saedhi ulagengum arindhadhe - andha jodhi thandha kanal oadi vandhingu needhi kaappadhum arindhadhe...

 
 
 
Padhuka Ramayanam

Ayoththi maa nagarile aiyan Sri Ramanaay azhagaay thavazhndha paadham arpudha isai koottum thandai kinkinigalum asaiya nadandha paadham...

 
 
 

Comments


  • facebook
  • twitter
  • linkedin

©2019 by SamratchanaRadio. Proudly created with Wix.com

bottom of page