Pennai tharuvadhu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Pennai tharuvadhu onre podhaadhaa - thirumanam
pon porul illai enraal aagaadhaa
vennai thirudi thinru vaelaiyatru uranguvorkku
annaandhu paarkka paarkka agappadaamal valarbavarkku
seer senaththi seyya engae povom
singaara kannanukku Sivashankara dhevanukku - engal
agilame than vadivamenru alatti kollum pervazhikku
aatti vaiththu kooththu paarththu aiyo paavam enbavarkku
palakodi naamamulla maappillai paerai poda
paththirikaikkenge naangal povom
patchi vaaganameri paarai valam vandhavarkku
parakkinra thaerukkenge povom
viswarupam eduththavarkku venkadaththu naadhanukku
oonjal palagaikkenge povom
mannalandhu vinnalandhu maavaliyai alandha indha
maappillaikkku seruppukkenge povom - engal
malaiyai kudaiyaay pidiththu gobargalai kaaththavarkku
maa meru kudaikkenge povom
paamabin mel paarkadalil paduththu niththirai kolvorkku
panju meththai vaanga enge povom -engal
பெண்ணைத் தருவது ஒன்றே போதாதா - திருமணம்
பொன் பொருளில்லை என்றால் ஆகாதா
வெண்ணை திருடித்தின்று வேலையற்று உறங்குவோர்க்கு
அண்ணாந்து பார்க்க பார்க்க அகப்படாமல் வளர்பவர்க்கு
சீர்செனத்தி செய்ய எங்கே போவோம்
சிங்கார கண்ணனுக்கு சிவசங்கர தேவனுக்கு - எங்கள்
அகிலமே தன் வடிவமென்று அலட்டிக்கொள்ளும் பேர்வழிக்கு
ஆட்டி வைத்து கூத்து பார்த்து ஐயோ பாவம் என்பவர்க்கு
பலகோடி நாமமுள்ள மாப்பிள்ளை பேரைப்போட
பத்திரிகைக்கெங்கே நாங்கள் போவோம்
பட்சி வாகனமேறி பாரை வலம் வந்தவர்க்கு
பறக்கின்ற தேருக்கெங்கே போவோம்
விஸ்வரூபம் எடுத்தவர்க்கு வேங்கடத்து நாதனுக்கு
ஊஞ்சல் பலகைக்கெங்கே போவோம்
மண்ணளந்து விண்ணளந்து மாவலியை அளந்த இந்த
மாப்பிள்ளைக்கு செருப்புக்கெங்கே போவோம் - எங்கள்
மலையை குடையாய் பிடித்து கோபர்களை காத்தவர்க்கு
மாமேருக் குடைக்கெங்கே போவோம்
பாம்பின் மேல் பாற்கடலில் படுத்து நித்திரை கொள்வோர்க்கு
பஞ்சுமெத்தை வாங்க எங்கே போவோம் - எங்கள்
Comments