Patrinai vittu vidu
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Patrinai vittu vidu - Shankaran kai
patri pidiththu vidu
atridum un kuraiye - nenje
alarndhidum nimmadhiye nenje
utru nee kettu vidu - ivan
oankaaram naadham thannai
satru sindhiththu vidu - indha
sathvaguna bodhanai nenje
natraamarai kayaththil
nallannam serndhadhu pol - bakthi
katraarai serndhuvidu - un
kayamai vilakki vidu
utraanai therndhu edu - un
ullaththai kaalil idu - indha
vatraa arutchunaiyai - vaari
vaari parugi vidu nenje
பற்றினை விட்டு விடு சங்கரன் கை பற்றி பிடித்து விடு
அற்றிடும் உன் குறையே நெஞ்சே அலர்ந்திடும் நிம்மதியே நெஞ்சே
உற்று நீ கேட்டு விடு இவன் ஓங்காரம் நாதம் தனை
சற்று சிந்தித்து விடு இந்த ஸத்வகுண போதனை நெஞ்சே
நற்றாமரை கயத்தில் நல்லன்னம் சேர்ந்தது போல்- பக்தி
கற்றாரை சேர்ந்து விடு உன் கயமை விலக்கி விடு
உற்றானை தேர்ந்து எடு உன் உள்ளத்தை காலில் இடு - இந்த
வற்றா அருட்சுனையை வாரி வாரிப் பருகி விடு நெஞ்சே
Comments