Paththarai maatru
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Paththarai maatru thangamadi
iththarai uyvura vandhadhadi - en
niththiraiyil varum nedunkanavil - indha
siththanin mugamae kaanudhadi
raththina sabaikku athipadhiyo
ratchanam seyyum sedhupadhiyo
machcha avadhaara maalavano
maamayil vaagana velavano
kaanthamalai jothi aanavano
shanthamuga raagavaendhirano
vaendhanivanthaan vaenkadano - annai
vijayalakshmi thandha baalakano
chiththirai maathaththu pournamiyo
sindhai valarum varakaviyo
raththina pudhu chivappoliyo
ratchikka vandha thava oliyo
neelakandan karai vandhu ninraan
neenda karunai karamum kondaan
gnaalangal potrum sirappudaiyaan - parama
gnaani ivan ennai ini padaiyaan
பத்தரை மாற்றுத் தங்கமடி
இத்தரை உய்வுற வந்ததடி - என்
நித்திரையில் வரும் நெடுங்கனவில் - இந்த
சித்தனின் முகமே காணுதடி
ரத்தின சபைக்கு அதிபதியோ
ரட்சணம் செய்யும் சேதுபதியோ
மச்ச அவதார மாலவனோ
மாமயில் வாகன வேலவனோ
காந்தமலை ஜோதி ஆனவனோ
சாந்தமுக ராகவேந்திரனோ
வேந்தனிவன்தான் வேங்கடனோ - அன்னை
விஜயலக்ஷ்மி தந்த பாலகனோ
சித்திரை மாதத்துப் பவுர்ணமியோ
சிந்தை வளரும் வரகவியோ
ரத்தினப் புதுச் சிவப்பொளியோ
ரட்சிக்க வந்த தவ ஒளியோ
நீலகண்டன் கரை வந்து நின்றான்
நீண்ட கருணைக் கரமும் கொண்டான்
ஞாலங்கள் போற்றும் சிறப்புடையான் - பரம
ஞானி இவன் என்னை இனி படையான்
Comments