Palanaal puviyil
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Palanaal puviyil pagattaaay thirindhu
padhathai unaraa kadaiyenai
orunaal vandhen edhiril ninrun
uravaay serththa shankarame
varu naalellaam thirunaalenru
vaiyam muzhudhum araikoovi
idhunaal mudhalaay kadainaal mudiya
iraivaa unai yaan paadeno
siruvaa enrunai azhaithathanaale
chiiththirame sinam kondaayo
iruvaal vizhiyil eri thee kaatti
iraivan naanena uraiththaayo
iru thaal malarai en sirameedhil
yetriye gnaanam oottaayo
karudhaa padhavi thandhen uyirai
kadai thetri karai yetraayo
பலநாள் புவியில் பகட்டாய் திரிந்து
பதத்தை உணராக் கடையேனை
ஒருநாள் வந்தென் எதிரில் நின்றுன்
உறவாய் சேர்த்த சங்கரமே
வருநாளெல்லாம் திருநாளென்று
வையம் முழுதும் அறைகூவி
இதுநாள் முதலாய் கடைநாள் முடிய
இறைவா உனை யான் பாடேனோ
சிறுவா என்றுனை அழைத்ததனாலே
சித்திரமே சினம் கொண்டாயோ
இருவாள் விழியில் எரி தீ காட்டி
இறைவன் நானென உரைத்தாயோ
இருதாள் மலரை என் சிரமீதில்
ஏற்றியே ஞானம் ஊட்டாயோ
கருதாப் பதவி தந்தென்னுயிரை
கடை தேற்றிக் கரையேற்றாயோ
Comments