Pala kodi karam
- SamratchanaLyrics
- Feb 18, 2019
- 1 min read
Pala kodi karam kooppi varaverkume
paarellaam unai vanangi siram thaazththume
nalam yaavum vilaindhingu valam koodume
varum kaalam ini enrum porkaalame
arul vellam ulagengum vazindhodume
anbullam emakkaaga dhinam vendume
irul seidha maayai ini ozhindhodume
igameedhil aanandham ezhundhaadume
pagai vaiththa nenjamellaam nagai sindhume
parivodu upasarikka dhinam mundhume
vagai vagaiyaay kalaigalellaam ini sirakkume
vallan ivan samratchana kodi parakkume
kadal alaigal ayaraadhun pugazh muzhangume
kaatchi ellaam un kolam thanai vazhangume - en
udal porul uyir ellaam un sondhame - enakkum
unaiyanri Shankara yedhu bandhame
பலகோடி கரம் கூப்பி வரவேற்குமே
பாரெல்லாம் உனை வணங்கி சிரம் தாழ்த்துமே
நலம் யாவும் விளைந்திங்கு வளம் கூடுமே
வருங்காலம் இனி என்றும் பொற்காலமே
அருள் வெள்ளம் உலகெங்கும் வழிந்தோடுமே
அன்புள்ளம் எமக்காக தினம் வேண்டுமே
இருள் செய்த மாயை இனி ஒழிந்தோடுமே
இகமீதில் ஆனந்தம் எழுந்தாடுமே
பகை வைத்த நெஞ்சமெல்லாம் நகை சிந்துமே
பரிவோடு உபசரிக்க தினம் முந்துமே
வகை வகையாய் கலைகளெல்லாம் இனி சிறக்குமே
வள்ளலிவன் சம்ரட்சண கொடி பறக்குமே
கடல் அலைகள் அயராதுன் புகழ் முழங்குமே
காட்சியெல்லாம் உன் கோலம் தனை வழங்குமே - என்
உடல் பொருள் உயிரெல்லாம் உன் சொந்தமே - எனக்கும்
உனையன்றி சங்கரா ஏது பந்தமே
Comments